பசுபதி திண்ணையில் உட்கார்ந்து, தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
பெண்களும், ஆண்களுமாக சிலர் கையில் ஒன்று அல்லது இரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு, சற்றுத் தொலைவில் இருந்த குளத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர்.

எதிர்ப்புறத்திலிருந்து தண்ணீர் நிரம்பிய குடங்களைத் தூக்கிக் கொண்டு, சிலர் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
பசுபதி குடும்பத்துக்கு இந்த சிரமம் இல்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில், எப்போதும் தண்ணீர் இருக்கும். அந்த ஊரில், ஐந்தாறு வீடுகளில் மட்டும்தான் அப்படி. பெரும்பாலான வீடுகளில், கிணறு இல்லை. இன்னும் பலர் வீட்டில் கிணறு இருந்தாலும், அந்தக் கிணறுகளில் தண்ணீர் ஊறுவதில்லை.
இத்தனை பேர், இவ்வளவு தூரம் நடந்து போய், கஷ்டப்பட்டு தண்ணீர் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்க்க, பசுபதிக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.
ஒருநாள், திடீரென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. உள்ளே போய் மனைவியிடம் பேசினார்.
"ஏன் பார்வதி, எல்லாரும் தண்ணி எடுக்க, இவ்வளவு தூரம் குளத்துக்கு நடந்து போய்க் கஷ்டப்படறாங்களே!" என்றார்.
"ஆமாம். என்ன செய்யறது? ஏதோ, நம்ம அதிர்ஷ்டம். நமக்கு அந்தக் கஷ்டம் இல்லை" என்றாள் பார்வதி.
"நம்ம தெருவில் இருக்கறவங்களை, நம்ம கிணத்திலேந்து ஒண்ணு ரெண்டு குடம் தண்ணி எடுத்துக்கலாம்னு சொன்னா என்ன? அவங்க கஷ்டம் குறையும் இல்ல?"
பார்வதி அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள். "ஏன், நம்ப வீட்டுக் கிணத்திலேயும் தண்ணி வத்திப்போய், நானும் குடத்தைத் தூக்கிக்கிட்டு குளத்துக்குப் போகணுமா?" என்றாள்.
"கொஞ்ச நாள் பாக்கலாமே! நம்ப தெருவில இருக்கற ஒரு பத்து பேர்தானே எடுக்கப் போறாங்க?" என்றார் பசுபதி.
"அதுவும், இப்ப கோடைக்காலம்."
"கோடைக்காலத்திலதானே, எல்லாருக்குமே தண்ணிக் கஷ்டம் அதிகமா இருக்கும்?"
"என்னவோ செய்யுங்க. ஆனா ஒண்ணு! கிணத்துல தண்ணி கீழ போயிடுச்சுன்னா, இதை நிறுத்திடணும். அப்புறம் தண்ணி ஊறி வந்து, நமக்கு மட்டும் தண்ணி கிடைக்கறதே பெரும் பாடாயிடும்" என்றாள் பார்வதி, அரை மனதுடன்.

அந்தத் தெருவிலிருந்து பத்துப் பேர் பசுபதி வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப் போகத் தொடங்கி, ஒரு மாதம் ஆகி விட்டது.
பார்வதி தினம் ஐந்தாறு முறை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கிணற்றின் நீர்மட்டம் இறங்கவில்லை.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 22
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பொருள்:
உலக நலனை விரும்பிச் செயல்படும் அறிவு படைத்தவனிடம் செல்வம் இருந்தால், அது ஊரில் அனைவரும் பயன்படுத்தும் குளம் தண்ணீரால் நிறைந்தது போலாகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment