திருக்குறள்
அறத்துப்பால்
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
51. துணையிருப்பாள் பார்கவி!
"உனக்கு உடம்பு சரியில்ல. நீ சமைக்க வேண்டாம். நான் வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொன்னேனே! எதுக்குக் காலையிலேயே எழுந்து இதெல்லாம் செய்யறே?" என்றான் கதிரேசன்.
"ஓட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு உங்களுக்கும் உடம்பு சரியில்லாம போகணுமா? அதோட குழந்தைகளுக்கு எப்படியும் சாப்பாடு கொடுத்து அனுப்பணுமே!"
"உண்மையான காரணம் அது இல்லை. நான் ஓட்டலில் சாப்பிட்டால் காசு செலவழிஞ்சுடுமேன்னுதானே?"
"நீங்களா ஓட்டல்ல சாப்பிடறவரு? நான் டிஃபன் கொடுத்தனுப்பாட்டா நீங்க வெறும் டீயையும் பன்னையும் சாப்பிட்டுட்டு வயித்தை நிரப்பிப்பீங்கன்னு எனக்குத் தெரியாதா?"
கண்களில் ததும்பிய கண்ணீரை மனைவி பார்த்து விடக் கூடாதே என்று கதிரேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதனால் பார்கவியின் கண்களுக்குள் பொங்கி எழுந்த கண்ணீரை அவனால் பார்க்க முடியவில்லை!
ஒரு வருடம் முன்பு வரை கதிரேசன் ஒரு சிறிய தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருந்தான். தொழிற்பேட்டையில் ஒரு சிறிய ஷெட், அதில் நான்கைந்து இயந்திரங்கள், ஏழெட்டு ஊழியர்கள் என்று ஒரு சிறிய அரசாங்கத்தை நடத்தி வந்தான்.
ஒரு பெரிய தொழில் நிறுவனத்துக்கு சில உதிரி பாகங்களைச் செய்து கொடுத்து வந்தான். தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வந்தன. ஆனால் ஒரு பில்லுக்குப் பணம் வர ஆறு மாதம் ஆகி விடும். மூன்று மாதம் கழித்துத்தான் பணம் கொடுப்போம் என்று ஆரம்பத்தில் அவர்கள் சொன்னபோது தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள் என்பதால் அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.
ஆனால் நாளடைவில் மூன்று மாதம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு ஆறு மாதம் ஆகி விட்டது. வங்கிக் கடன் கொஞ்சம், வேறு கடன்கள் கொஞ்சம் என்று வாங்கி, கதிரேசன் சமாளித்து வந்தான்.
பழைய பில்களுக்குப் பணம் வந்து கொண்டிருந்ததால் பணப் புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. வீட்டுச் செலவுக்கு தாரளமாகப் பணம் கொடுத்து வந்தான். காரும் வைத்திருந்தான். ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை என்றே சொல்ல வேண்டும். பார்கவி வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள். அதனால் அவள் வசதியாக வாழ வேண்டும் என்ற அக்கறை கதிரேசனிடம் இருந்தது.
எதிர்பாராமல் நிலைமை மாறி விட்டது. அவனுக்கு ஆர்டர் கொடுத்து வந்த பெரிய நிறுவனம் தொடர்ச்சியான பொருளாதார இழப்புகளால் திடீரென்று மூடப்பட்டது. கதிரேசனுக்கு வர வேண்டிய ஆறு மாத பில் பணம் முடங்கிப் போனது.
நிறுவனத் தலைவரை நேரே சந்தித்துக் கதிரேசன் மன்றாடியபோது, நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார். கதிரேசன் போல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதாகவும் சொன்னார். ஊழியர்களுக்கே மூன்று மாத சம்பள பாக்கியாம்!
கடன் கொடுத்த வங்கியும், மற்றவர்களும் நெருக்கடி கொடுத்ததால் வேறு நிறுவனங்களிலிருந்து ஆர்டர் வாங்கித் தொழில் நடத்தும் முயற்சியை அவனால் மேற்கொள்ள முடியவில்லை. சொந்த வீடு, கார், மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் விற்றுக் கடன்களை அடைத்த பிறகு அவன் கையில் எதுவும் மிஞ்சவில்லை.
வேறு வழி இல்லாமல் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைக்குச் சேர்ந்தான் கதிரேசன். குழந்தைகள், உயர் கல்வி கொடுப்பதாகச் சொல்லி உயர் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளியிலிருந்து கட்டணம் இல்லாத அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். சிறிதாக ஒரு வாடகை வீடு, குறைந்த பட்ஜெட்டில் வாழ்க்கை என்று மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் வாழ்க்கை திசை மாறியது.
பார்கவியின் தந்தை கதிரேசனைக் குடும்பத்துடன் தங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளும்படி அழைத்தார். வருமானத்துக்கு வழி செய்து தரவும் முன் வந்தார். கதிரேசன் பதில் சொல்லும் முன்பே பார்கவி மறுத்து விட்டாள். "ஒவ்வொருத்தர் வாழ்க்கையை அவங்களேதான் வாழ்ந்துக்கணும் அப்பா" என்று சுருக்கமாக பதில் சொல்லி அவரை அனுப்பி விட்டாள். அவர் போகும்போது அவர் மனம் புண்படக் கூடாதே என்பதற்காக "ஸ்கூல் லீவு விட்டதும் குழந்தைங்களை அனுப்பி வைக்கிறேன்" என்றாள், உறவுச் சங்கிலி அறுந்து விடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக.
அதன் பிறகு பார்கவி தன்னை அடியோடு மாற்றிக் கொண்டாள். வீட்டு வேலைக்கு ஆள், கடைக்குப் போக கார் என்று வாழ்ந்து வந்தவள், தன் கையையும் காலையும் அதிகம் நம்ப ஆரம்பித்தாள்.
குழந்தைகளிடம் அவள் அடிக்கடி சிக்கனத்தைப் பற்றிப் பேசியது மறைமுகமாகத் தனக்கும் ஒரு பாடமோ என்று கதிரேசன் நினைத்துக் கொள்வான். 'இவள் மட்டும் நிதி மந்திரியாக இருந்தால் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி விடுவாள்' என்று கூடக் கதிரேசன் நினைத்திருக்கிறான்.
எல்லாவற்றையும் விட, வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திருமணத்துக்குப் பிறகும் வசதியாக வாழ்ந்தவளால் எப்படித் தன்னை இந்த அளவுக்கு மாற்றிக் கொள்ள முடிந்தது என்ற வியப்பு அவனை விட்டு நீங்கவில்லை.
கதிரேசன் வேலைக்குக் கிளம்பிய பிறகு பார்கவிக்கு வீட்டு வேலை கொஞ்சம் இருந்தது. அதை விரைவாக முடித்து விட்டு, முகம் கழுவி, புடவை மாற்றிக் கொண்டு கைப்பையை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.
பகல் வேலைகளில் அவள் என்ன செய்கிறாள் என்பது கதிரேசனுக்குத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில் அவள் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். பயிற்சி முடிந்ததும் மிகக் குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே பெண்கள் அழகுக்கலை நிலையம் ஒன்றைத் துவக்கி அதில் கிடைக்கும் வருவாய் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பது அவளது திட்டம்.
குறள் 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பொருள்:
தனது குடும்பத்துக்குப் பொருத்தமான நற்பண்புகளைக் கடைப்பிடித்துத் தன் கணவனின் பொருளாதார நிலைக்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத் துணை என்று கருதப்படுவாள்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
52. வெற்றி மீது வெற்றி வந்தும்...
பரத் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்று அமர்ந்தபோது தொலைபேசி அடித்தது. அவரது உதவியாளர் வந்தனாதான் பேசினாள்.
"சார், டில்லியிலிருந்து தொழில்துறைச் செயலர் மூன்று முறை ஃபோன் செய்து விட்டார். மறுபடியும் அவரிடமிருந்து அழைப்பு வரக் கூடும்...இதோ வந்தே விட்டது!" என்றாள் அவசரமாக.
"கொடுங்கள்!" என்றார் பரத்.
தொழில்துறைச் செயலர் பேசினார். பிரதமருக்குத் தொழில்துறைப் பிரச்னைகள் பற்றி ஆலோசனை கூற ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறதாம். அதில் உறுப்பினர் ஆக பரத்துக்கு விருப்பமா என்று கேட்டார். மாதம் ஒரு நாள் டில்லி சென்று வர வேண்டி இருக்குமாம் - அரசு செலவில்!
"சார், இது ஒரு பெரிய கௌரவம். நான் ஒரு சாதாரணத் தொழில் அதிபர். என்னை மதித்து..."
"இந்தக் குழுவில் புகழ் பெற்ற தொழில் அதிபர்களைச் சேர்ப்பதை விட சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களே இடம் பெற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்!"
தொழில்துறைச் செயலர் சத்தம் இல்லாமல் ஒரு புகழ் மாலையைச் சூட்டி விட்டார்!
"இது பெரிய கௌரவம், அதிர்ஷ்டம், வாய்ப்பு எல்லாம்!"
"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் நேரடியாக பதில் சொல்லவில்லை. குழுவின் உறுப்பினராக உங்களுக்கு சம்மதம்தானே?" என்றார் செயலர், அரசாங்க தோரணையில்.
"சம்மதம்தான்" என்று பரத் சொன்னதும் இதற்காகவே காத்திருந்தது போல் தொலைபேசியை வைத்து விட்டார் அரசுச் செயலர்.
"என் சம்மத்தத்தைக் கேட்டவர் அவர் முடிவைச் சொல்லவில்லையே?" என்ற பரத்தின் கேள்விக்கு சில நிமிடங்களிலேயே ஈ-மெயில் மூலம் பதில் வந்தது - அவரது உறுப்பினர் பதவியை உறுதி செய்து.
அவர் ஈ-மெயிலைப் படித்து முடித்தபோது அவரது கைபேசியில் அழைப்பு வந்தது. மனைவி!
இந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் உற்சாகம் அவரிடம் இல்லை. மாறாக, 'என்ன தலைவலியோ?' என்று நினைத்துக்கொண்டேதான் "ஹலோ, சொல்லு!" என்றார்.
"என்னத்தைச் சொல்ல? உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேனே, செய்தீர்களா?"
"இதோ பார், காலையில் ஆஃபீஸ் கிளம்பும்போது ஏதோ சொன்னாய். பேசினால் தகராறு வரும் என்றுதான் பேசாமல் வந்து விட்டேன். இப்போது ஏன் ஆஃபீசுக்கு ஃபோன் செய்கிறாய்?"
"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நல்ல வசதியான இல்லத்தில உங்கம்மாவைச் சேர்க்க வேண்டியதுதானே?"
"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நர்ஸ் வச்சு அம்மாவைப் பாத்துக்க நம்மால முடியும். அதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கோம்?"
"இங்க பாருங்க, வீட்டில எப்பவும் நர்ஸ் நடமாடிக்கிட்டு! இது ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. என்னால இதைச் சகிச்சுக்க முடியல."
"முடியலேன்னா நீ போயிடு முதியோர் விடுதிக்கு. உனக்கும் நாப்பது வயசுக்கு மேலே ஆயிடுச்சு இல்லே!"
பரத் கோபமாக ஃபோனை வைத்து விட்டார்.
கைபேசியில் நிறைய அழைப்புகள் வந்திருந்தன.யார், யார் என்று பார்ப்பதற்குள் மேசை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது. அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வாழ்த்துச் சொன்னார். இதற்குள் எப்படியோ விஷயம் பரவி விட்டது. கைபேசிக்கு வந்திருந்த அழைப்புகளும் இது பற்றியதாகத்தான் இருக்கும்.
அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அவரை அழைத்து வாழ்த்திய பலர்!
1 மணிக்கு உள்ளே வந்த அவரது செயலர் வந்தனா, "சார். நீங்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதனால் இன்னும் அரை மணி நேரத்துக்கு நான் எந்த அழைப்பையும் உங்களுக்கு அனுப்பப் போவதில்லை. உங்கள் கைபேசியையும் என்னிடம் கொடுங்கள்" என்று அவர் மேசை மீதிருந்த கைபேசியை உரிமையுடன் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டவள் திரும்பி, "வாழ்த்துக்கள் சார், நீங்கள் பிசியாக இருந்தததால் இத்தனை நேரம் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை" என்றாள்.
"உங்களுக்கு எப்படித் தெரியும்? ஓ, உங்களைத்தான் என் ஈ-மெயிலைப் பார்க்கச் சொல்லியிருக்கிறேனே! அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியுமா?" என்றார் பரத்.
"இன்னும் சொல்லவில்லை சார். நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்."
"சொல்லி விடுங்கள்" என்றார் பரத்.
அப்போதுதான் அவருக்கு விஷயத்தை மனைவியிடம் சொல்லவில்லை என்று நினைவு வந்தது.
'சொல்லி என்ன ஆகப் போகிறது? 'அப்படியா?' என்று ஒரு வார்த்தையில் உற்சாகம் இல்லாமல் பதில் சொல்லி விட்டுத் தனக்கு வேண்டிய விஷயங்களைப் பேசத் தொடங்கி விடுவாள் மனைவி' என்று நினைத்துக் கொண்டார் பரத்.
குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
பொருள்:
மனைவியிடம் குடும்பத்துக்குத் தேவையான பண்புகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் வேறு எத்தனை சிறப்புகள் இருந்தும் பயனில்லை.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
53. மனைவி செய்யும் மாயம்!
"உங்க அண்ணன் எப்ப நேரத்தோட வீட்டுக்கு வந்திருக்காரு? ஏன், ஏதாவது கடன் கேக்கப் போறீங்களா?" என்றாள் சிவகாமி.
"நான் எப்ப அண்ணன்கிட்ட கடன் கேட்டிருக்கேன்?" என்றான் சண்முகம், அடிபட்டவனாக.
"எனக்கு எப்படித் தெரியும் உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற விவகாரம்? உங்களுக்குக் கடன் கொடுத்தா எங்கிட்ட சொல்லவா போறாரு உங்க அண்ணன்?"
இதற்குள் பழனி வந்து விட்டான். "ஏண்டா வாசல்லேயே நிக்கறே?... ஏம்மா வந்தவங்களை உள்ள கூப்பிடறதுல்ல?"
"அவரு என்ன வெளி ஆளா என்ன? உங்க தம்பிதானே? நான் கூப்பிட்டாத்தான் உள்ளே வருவாரா?"
சிவகாமி உள்ளே போய் விட்டாள்.
"தம்பிக்கும் எனக்கும் காப்பி கொண்டா" என்றான் பழனி இரைந்து.
பழனியும், சண்முகமும் முன்னறையில் வந்து உட்கார்ந்தார்கள்.
"ஒண்ணுமில்ல அண்ணே! சங்கருக்குக் கல்யாணப் பத்திரிகை அடிக்கணும். அதுல நம்ம குடும்பப் பேரு, தாத்தா பேரு எல்லாம் போடணும் இல்லை? எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாதே! அதுதான் உன்கிட்ட விவரம் கேட்டுக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்."
"சொல்றேன். ஆனா ஒரு விஷயம் உறுத்திக்கிட்டே இருக்கு. உன் பையன் நல்லாப் படிச்சிருக்கான். அவனுக்கு வசதியான இடத்திலேருந்தெல்லாம் பொண்ணு கொடுக்கப் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்களே, நீ ஏன் ஒரு சாதாரணக் குடும்பத்திலேருந்து பொண்ணு எடுக்கற? பொண்ணுக்குப் படிப்பு, வேலை எல்லாம் கூட இல்லை!"
"அண்ணே! நான் கூட அவ்வளவா வசதி இல்லாதவன்தான். என் பொண்டாட்டி வடிவும் ஏழைக் குடும்பத்திலேந்து வந்தவதான். நாங்க சந்தோஷமாத்தானே இருக்கோம்? இன்னும் சொல்லப் போனா, சங்கர் வெளியூர்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சு இப்ப நல்ல வேலைக்குப் போயிருக்கான்னா அதுக்கு வடிவுதான் காரணம்.

"என்னோட குறைஞ்ச வருமானத்தில குடும்பத்தையும் நடத்தி, நாலு காசு சேத்து, போதாததுக்குக் கடனை உடனை வாங்கி சங்கரைப் படிக்க வச்சது அவதான். அதனாலதான் சங்கருக்குப் பொண்ணு பாக்கும்போதே வசதியான இடமான்னு பாக்கறதை விட, பொண்ணு குடும்பப் பாங்கானவளான்னுதான் பாத்துத் தேர்ந்தெடுத்தோம்.
"சங்கருக்கும் பொண்ணைப் புடிச்சிருக்கு. பொண்ணுக்கும் சங்கரைப் புடிச்சிருக்கு. இப்பல்லாம் நம்ம காலம் மாதிரி இல்ல. சங்கரும் அந்தப் பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னயே அடிக்கடி சந்திச்சுப் பேசி ஒத்தரை ஒத்தரு நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. வசதியா அண்ணே முக்கியம்? மனசுதானே முக்கியம்!" என்றான் சண்முகம்.
பழனி மனது புண்படக் கூடாதே என்று சண்முகம் சொல்லிக் காட்டாத விஷயங்கள் பழனியின் மனதில் அலை மோதின. பழனி வசதியானவன்தான். ஆனால் சிவகாமியின் பொறுப்பற்ற, யாரையும் மதிக்காத போக்கினால் பழனிக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை.

அவர்களின் ஒரே பெண் கூட அம்மாவின் போக்குப் பிடிக்காமல் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து விட்டு வெளியூரிலேயே வேலை செய்கிறாள். கல்யாணத்தைப் பற்றிப் பிடி கொடுத்துப் பேசுவதில்லை.
தன் பையன் கல்யாண விஷயத்தில் தம்பியின் அணுகுமுறை சரிதான் என்று தோன்றியது பழனிக்கு. தம்பி கேட்ட விவரங்களை ஒரு காகிதத்தில் குறித்துக் கொடுத்தான். சண்முகம் விடை பெறும் சமயம்தான் அரை மணி நேரம் ஆகியும் இன்னும் மனைவி காப்பி கொண்டு வரவில்லை என்பது பழனிக்கு நினைவு வந்தது!

குறள் 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
பொருள்:
மனைவி உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாக இருந்தால் ஒருவனுக்கு வாழ்க்கையில் இல்லாதது எது? (எல்லாமே இருப்பது போல்தான்.) மனைவி பண்புள்ளவளாக இல்லாவிட்டால், வாழ்க்கையில் இருப்பது எது? (எதுவுமே இல்லாதது போல்தான்.)
இந்தக் கதைக்கான காணொளி இதோ:
54. மாதவியும் கண்ணகிதான்!
மாதவியிடமிருந்து விடைபெறுமுன் லக்ஷ்மி தயங்கியபடியே சொன்னாள். "மேடம், இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா இந்த நாலு நாள் பழக்கத்திலேயே எங்கிட்ட இவ்வளவு அன்பா நடந்துக்கிட்ட ஒங்ககிட்ட சொல்லாம இருக்க மனசில்லை."
"சொல்லுங்க!" என்றாள் மாதவி.
"நம்ப மானேஜர் பெண்கள்கிட்ட வழியறவரு. அவருகிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கிட்டாதான் இங்கே வேலை செய்ய முடியும்!"
"அனுசரணையான்னா?"
"அவரு கொஞ்சம் அசடு வழியப் பேசுவாரு. 'உன்னோட டிரஸ் நல்லா இருக்கு'ம்பாரு. இன்னொரு நாளைக்கு, 'உன் கலருக்கு இந்த டிரஸ் பொருத்தமா இல்லை'ம்பாரு. ஏதாவது அசட்டு ஜோக் சொல்லுவாரு....சில சமயம் தொட்டுப் பேசுவாரு."
"தொட்டுப் பேசுவாரா?"
"தற்செயலாத் தொடற மாதிரி தொடுவாரு."
"இதையெல்லாம் நீங்க சகிச்சுக்கிட்டீங்களா?"
"வேற வழி? நான் மட்டுமா? எனக்கு முன்னால இருந்த பொண்ணு கூட சகிச்சுக்கிட்டாங்க. நானாவது கல்யாணமாகாதவ. பஸ்ஸில சில பேரு வேணும்னே இடிக்கறதில்லையா? அது மாதிரின்னு நெனச்சுப்பேன். ஆனா அவங்க கல்யாணம் ஆனவங்க. அவங்களே பாவம் சகிச்சுக்கிட்டாங்க. வேலையை விட்டுப் போகும்போது என்கிட்டே அவங்க உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துட்டாங்க. நீங்களும் கல்யாணம் ஆனவங்கதான்..."
"கல்யாணம் ஆனவங்களா இல்லையாங்கறது முக்கியம் இல்லை. சரி. நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி."
இரவில் கணவனிடம் இதைப் பற்றிச் சொன்னாள் மாதவி. கணவன் தன்னை வேலையை விட்டு விலகி விடச் சொல்லுவானோ என்று நினைத்தாள். ஆனால் அவன் சற்று கூடப் பதட்டம் இல்லாமல் 'உன்னால இதையெல்லாம் மானேஜ் பண்ண முடியும்!' என்று சொல்லி விட்டான். எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று மாதவிக்குப் புரியவில்லை.
லக்ஷ்மி சொன்னது போலவே மானேஜர் அவளிடம் வழிய ஆரம்பித்தார்.
"உங்க பேரு ரொம்ப செ... அட்ராக்டிவா இருக்கு!" என்றார்.
மாதவி மௌனமாக இருந்தாள்.
அவள் மௌனத்தினால் துணிவு பெற்று "நான் கவனிச்சிருக்கேன். எல்லாருக்கும் எல்லா உடையும் பொருந்தறதில்ல. ஆனா உனக்கு எல்லா உடையுமே அழகா இருக்கு" என்றார் அவர். தன்னை ஒருமையில் அழைக்கும் உரிமையை அவர் எடுத்துக்கொண்டதை மாதவி கவனித்தாள்.
"சார், ஒரு நிமிஷம். ஃபோன் வந்திருக்கு" என்று மாதவி அவர் அறைக்கு வெளியே சென்று விட்டுச் சற்று நேரம் கழித்து வந்தாள்.
"யாருகிட்டேயிருந்து ஃபோன்?"
மாதவி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், "சொல்லுங்க சார்! ஏதோ கடிதங்களுக்கு பதில் எழுதணும்னு சொன்னீங்களே?" என்றாள்.
"இந்தா! இது உனக்கு ஒரு டெஸ்ட். இந்த லெட்டர்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டு வா. உன் திறமை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்."
'உங்களுக்கும் இது ஒரு டெஸ்ட்தான்' என்று நினைத்துக் கொண்ட மாதவி, சற்று முன்பு வெளியில் போனபோது வீடியோ எடுப்பதற்காக செட் செய்த கைபேசியை வலது கையில் சற்றே பின்புறமாக ஒரு கோணத்தில் வைத்துக் கொண்டாள். 'இந்தக் கோணத்தில் காட்சி சரியாகப் பதிவாக வேண்டுமே' என்று நினைத்துக் கொண்டாள்.
அவர் கடிதங்களை நீட்டியதும், அவற்றை வாங்க இடது கையை நீட்டினாள்.
"என்ன இடது கையை நீட்டறே! ஆர் யூ லெஃப்ட் ஹேண்டட்?" என்ற மானேஜர் தற்செயலாகக் கை படுவதுபோல் அவள் கையை மணிக்கட்டுக்கு மேல் பற்றினார்.
மாதவி வீடியோ பட்டனை அழுத்தினாள்.
மாதவியிடமிருந்து எதிர்ப்பு வராததால், மானேஜர் அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றினார்.
"கையை எடுங்க சார். வீடியோ எடுத்தாகி விட்டது!" என்றாள் மாதவி.
மானேஜர் பதறிப் போய்க் கையை உதறி, "வாட் இஸ் திஸ்?" என்றார்.
தன கைபேசியில் பிடிக்கப்பட்ட காட்சியை அவரிடம் காட்டிய மாதவி, "சில வினாடிகளுக்கு முன்னே நடந்ததை வீடியோ எடுத்திருக்கிறேன். உங்க மனைவிகிட்ட காட்டினா சந்தோஷப்படுவாங்க. இதில என்னோட முகம் விழலை. அதனால youtubeல கூடப் போடலாம். நல்லவேளை! கீழேயிருந்து ஒரு ஆங்கிள்ள எடுக்கிறோமே எப்படி வருமோன்னு கவலைப்பட்டேன், நல்லாவே வந்திருக்கு! ஹேட்ஸ் ஆஃப் டு மாடர்ன் டெக்னாலஜி!"
"உனக்கு என்ன வேணும்?" என்றார் மானேஜர், கோபமும் பயமும் கலந்த குரலில்.
"முதல்ல, இந்த 'வா போ' ங்கறதையெல்லாம் விட்டுட்டு என்னை மரியாதையா அழைக்கணும். அடுத்தது இங்கே வேலை செய்ற பெண்கள்கிட்ட சில்மிஷம் பண்ற வேலையை நிறுத்தணும்."
மானேஜர் என்ன சொல்வதென்று தெரியாமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்.
"பயப்படாதீங்க. வேற எந்த விதத்திலேயும் உங்களை நான் பிளாக்மெயில் பண்ண மாட்டேன். உங்க கீழ வேலை செய்யறவள் என்கிற முறையில் உங்ககிட்ட எப்படிப் பணிவோடும் கட்டுப்பாட்டோடும் நடந்துக்கணுமோ அப்படி நடந்துப்பேன்."
அவர் கொடுத்த கடிதங்களை வலது கையில் வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் மாதவி.
குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
பொருள்:
கற்பு என்னும் உறுதியான பண்பு ஒரு பெண்ணிடம் இருக்குமானால், பெண்ணை விடப் பெருமை உடையது வேறு என்ன இருக்க முடியும்?
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
55. மழை வருமா?
"இருக்கு அத்தை" என்றாள் பிரியா.
'பின்னே ஏன் ஏத்தலே?"
"குளிக்காம விளக்கு ஏத்த வேண்டாம்னுதான்!"
"குளிக்காமயா சமையல் பண்றே?"
"இது அவருக்கு மட்டும் அத்தை. உங்களுக்குக் குளிச்சுட்டு அப்புறமா செய்யறேன்."
"ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியாவா சமைப்பே? கேஸ், சாமான்கள் எல்லாம் அதிகமா செலவாகாது? உனக்கும்தானே கஷ்டம்?"
அறிந்தோ அறியாமலோ தன் நலத்தில் அக்கறை காட்டிப் பேசி விட்ட தன் மாமியாருக்கு மனதளவில் நன்றி தெரிவித்தாள் பிரியா.
"என்ன செய்யறது அத்தை? அவரு இன்னிக்கு சீக்கிரமா கிளம்பணுமாம். அதனாலதான் அவருக்கு சாப்பாடு செஞ்சு குடுத்தனுப்பலாம்னுட்டு முதல்ல அவருக்கு மட்டும் கொஞ்சமா செய்யறேன்."
"அவன் இப்படித்தான் சில சமயம் சீக்கிரம் கிளம்புவான். அப்பெல்லாம் வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொல்லுவான். அதனால நான் எதுவும் செய்ய மாட்டேன்."
"இப்பவும் அப்படித்தான் சொன்னார் அத்தை. நான்தான் வெளியில சாப்பிட்டு அவரு உடம்பைக் கெடுத்துக்கக்கூடாதுன்னு அவரை வற்புறுத்தி சாப்பாடு கொடுத்து அனுப்பறதாச் சொன்னேன்."
'என் பிள்ளை மேல் எனக்கு இல்லாத அக்கறை இவள் புருஷன் மீது இவளுக்கு இருக்கிறதாக்கும்!' என்ற இயல்பான 'மாமியார் சிந்தனை' பத்மாவின் மனதில் எழுந்தாலும், தன் மகனின் உடல்நலத்தில் மருமகள் காட்டும் அக்கறையை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.
ஆயினும் மாமியாரின் பந்தாவை விட்டுக்கொடுக்க விரும்பாமல், "எந்த சந்தர்ப்பத்திலும் சாமிக் குத்தம் வர விடக் கூடாது. நம்ப குடும்பத்தில சாமி கும்பிடறது ரொம்ப முக்கியம். குளிச்சுட்டு சாமிக்கு வெளக்கேத்திக் கும்பிட்டப்பறம்தான் சமையல், சாப்பாடு எல்லாம். சாமிக்கு அப்புறம்தான் மனுஷங்க. அது அரசனா இருந்தாலும் சரி, புருஷனா இருந்தாலும் சரி" என்று ஒரு சொற்பொழிவு ஆற்றி விட்டுச் சென்றாள்.
'அரசனை கவனிக்க ஆயிரம் சேவகர்கள் இருப்பார்கள். என் புருஷனை நான்தானே கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் பிரியா.
கணவன் கிளம்பிச் சென்ற பிறகு பிரியா குளித்து விட்டு வந்தபோது, அவள் மாமியார் வற்றல் பிழிவதற்காகக் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
"என்ன அத்தை, வற்றல் பிழியப் போறோமா இன்னிக்கு?"
"ஆமாம். சீக்கிரம் வா. இப்பவே பிழிஞ்சு காய வச்சாத்தான் நல்லா காயும்."
"இன்னிக்கு மழை வரும் போல இருக்கே?"
"சித்திரையில ஏதுடி மழை? அதுதான் வெய்யில் காயுதே? வெய்யில் கொஞ்சம் மந்தமா இருக்கறதனால மழை வரும்னு சொல்றியா? கண்டிப்பா வராது. கொஞ்ச நேரத்தில வெய்யில் கொளுத்த ஆரம்பிச்சுடும் பாரு!"
அவர்கள் இருவரும் மொட்டை மாடிக்குப் போய் வற்றல் பிழிய ஆரம்பித்த பத்து நிமிடங்களில் 'சட சட'வென்ற பெரும் தூற்றலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
குறள் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பொருள்:
கணவனையே தெய்வமாக நினைத்து வழிபடும் பெண் 'பெய்' என்று சொன்னால் மழை பெய்யும்.
(குறிப்பு: இந்தக் குறளின் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் 'கணவனை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் பெண் சொன்னால் மழை கூடப் பெய்யும்' என்ற உட்பொருளின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
அலாரம் அடித்தபோது சுமித்ரா எழுந்திருக்கவில்லை. அதற்கு ஐந்து நிமிடம் முன்பே எழுந்து பல் துலக்கப் போய் விட்டாள். தினமும் அலாரம் வைத்து எழுந்து பழகியதில் தானாகவே விழிப்பு வர ஆரம்பித்து விட்டது.
அலாரம் அடித்த சத்தம் கேட்டதும், இனி அடுத்த நாளிலிருந்து அலாரம் வைக்காமலேயே எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.
'கடிகாரமே, இனிமேல் எனக்காக இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் என்னை எழுப்ப வேண்டாம்!'
அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவளுக்கு சமையல் அறையில் வேலை இருந்தது. கணவன், மாமியார், குழந்தைகளுக்குக் காலை உணவு, மதிய உணவு செய்து குழந்தைகளுக்கும், தனக்கும் மதிய உணவைக் கட்டி முடித்த பின் மாமியாரை மென்மையாக எழுப்பினாள்.
மாமியார் எழுந்ததும் தான் செய்து வைத்தவற்றை அவரிடம் சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பினாள் சுமித்ரா.
"ஏன் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிட்டே?" என்றார் மாமியார்.
"இனிமே பஸ்ஸிலதான் போகணும். அதனால கொஞ்சம் சீக்கிரம்தான் கிளம்பணும்."
"ஏன் சரவணன் வர மாட்டானா?"
"அவனுக்கு நேரத்தை மாத்திட்டாங்க. அவன் இனிமே லேட்டாதான் கிளம்புவான். அதனால அவனோட போக முடியாது."
"அடப்பாவமே! ஏற்கனவே நீ நாள் முழுக்க உழைக்கறே! உனக்கு இன்னும் அதிகப்படி கஷ்டமா?"
"நீங்க இப்படிச் சொல்றதே ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை. எந்த மாமியார் இப்படி மருமகள் கஷ்டப்படறாளேன்னு நெனைப்பாங்க?"
சுமித்ராவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"ஏண்டி அழறே? உன் கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாள்தான். சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்" என்றார் மாமியார், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து.
'நல்லவேளை! நான் அழுத காரணம் அத்தைக்குத் தெரியாது, சரவணனோடு என்னால் இனிமேல் ஏன் போக முடியாது என்பது தெரியாத மாதிரி!'
சரவணன் அவளுடைய நிறுவனத்தில் வேலை செய்பவன். அவளை விட ஒரு வயது சிறியவன். அவன் அவள் வீட்டு வழியேதான் அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்பதால் அவள் அவனுடனேயே ஸ்கூட்டரில் வரலாம் என்று சொன்னவன் அவன்தான். முதலில் சுமித்ரா தயங்கினாலும், அவள் கணவனும், மாமியாரும் வற்புறுத்தியதால் அதற்கு ஒப்புக் கொண்டாள்.
அலுவலகத்தில் சிலர் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசியதை அவள் பொருட்படுத்தவில்லை. சரவணன் தனது ஒன்று விட்ட சகோதரன் என்றே அவள் மற்றவர்களிடம் சொல்லி இருந்தாள். சரவணனும் அவளை 'அக்கா' என்றே அழைத்து வந்தான்.
ஆனால் பல நாட்களுக்குப் பிறகு இந்த உறவில் ஒரு சிக்கல் விழுந்து விட்டது.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பம்போது, சில சமயம், அவர்கள் வழியில் உள்ள ஒரு சிற்றுண்டி விடுதியில் காப்பி அருந்துவார்கள். நேற்று அதுபோல் காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது, சரவணன் முதல் முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.
"சுமித்ரா! நான் உன்னை விட ஒரு வயசுதான் சின்னவன். இந்த அக்கா தம்பி உறவெல்லாம் எதுக்கு?" என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தான்.
ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த சுமித்ரா, ஒன்றும் சொல்லாமல் காப்பியைக் குடித்து முடித்து விட்டு எழுந்தாள். பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு விடுவிடுவென்று வெளியேறினாள்.

பின்னாலேயே ஒடி வந்த சரவணன் "அக்கா, தப்பா நெனச்சுக்காதீங்க. ஐ ஆம் சாரி... " என்று பதற்றத்துடன் மன்னிப்புக் கேட்டதைப் பெருட்படுத்தாமல், "நாளையிலேருந்து நான் பஸ்ஸிலேயே போய்க்கறேன். நீ என் வீட்டுக்கு வராதே!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.
'ஏதோ உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டான். கண்டித்துப் பேசினால், தன் தவறை உணர்ந்து பழையபடி ஆகி விடுவான்' என்று தோன்றினாலும், ஒரு தவறான எண்ணம் அவன் மனதில் உதித்த பிறகு அவனுடன் தொடர்ந்து நட்பாக இருப்பது சரி வராது என்று நினைத்து அவன் உறவைத் துண்டித்து விட்டாள் சுமித்ரா.

இப்போது மாமியார் அவளுக்காகப் பரிதாபப்பட்டுப் பேசியபோது சுமித்ரா அழுதது சரவணன் இப்படி நடந்து கொண்டு ஒரு நல்ல நட்பை அழித்து விட்டானே என்ற ஆற்றாமையால்தான்.
மாலை சுமித்ரா வீட்டுக்குத் திரும்பியபோது பள்ளியிலிருந்து திரும்பியிருந்த குழந்தைகள் அவளை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை விசாரித்து விட்டுக் கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்றாள் சுமித்ரா.
"சாப்பிட்டீங்களா? உங்களுக்குக் கத்தரிக்கா சாம்பார் புடிக்காது. ஆனா வேற காய் இல்லாததால கத்தரிக்கா இல்லாம தனியா சாம்பார் எடுத்து வச்சிருந்தேன். அத்தைகிட்ட சொல்ல மறந்துட்டேன்."
"அதை விடு. நீ ஏன் சரவணனோட போகலே? அம்மா அவனுக்கு நேரம் மாத்திட்டதா சொன்னாங்க. உங்க கம்பெனியில ஷிஃப்ட் கிடையாதே?" என்றான் அவள் கணவன் ராகவன்.
சுமித்ராவுக்கு மீண்டும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "எவ்வளவு நாளைக்கு அவனோட போக முடியும்? ஆஃபீஸில வேற சில பேரு தப்பாப் பேசறாங்க. நீங்க அடிக்கடி சொல்லுவீங்க இல்ல, நாம யாரையும் நம்பி இருக்கக் கூடாதுன்னு! அதனாலதான் இந்த ஏற்பாடு வேண்டாம்னு நிறுத்திட்டேன்."
"என்னவோ நடந்திருக்கு. சரி. எப்படியும் கொஞ்ச நாள் கழிச்சு நீ எங்கிட்ட சொல்லுவ. அப்ப தெரிஞ்சுக்கறேன்"
"சரி. எழுந்திருங்க. என்னைப் புடிச்சுக்கிட்டு நடந்து பழகுங்க."
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு குணமாகிக் கொண்டு வந்த ராகவன் அவள் தோளில் கை வைத்தபடி நடந்தான்.
"நேத்தியை விட இன்னிக்கு நல்லா நடக்கிறீங்க" என்றாள் சுமித்ரா உற்சாகமாக.
"தினமும் காலையில சீக்கிரம் எழுந்து, எங்களுக்கெல்லாம் சமையல் செஞ்சு வச்சுட்டு, வேலைக்குப் போய்த் திரும்பிய உடனேயே எனக்கு நடைப் பயிற்சி கொடுக்க வந்துடறியே, உனக்குக் கொஞ்சம் கூடச் சோர்வே இல்லியா? என்றான் ராகவன் வியப்புடன்.
"இல்லை!" என்றாள் சுமித்ரா.
குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்:
தன்னை (தன் கற்பை)க் காப்பாற்றிக் கொண்டு), தன் கணவனை அக்கறையுடன் கவனித்துக் கொண்டு, தன் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, மனம் தளராமல் வாழ்பவள் பெண்.

57. வீட்டில் பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்!
நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரியாக இருக்கும் அவனுக்குத் தனி அறை உண்டு.
அவன் அறைக்கு வெளியே முன்னறை போல் இருந்த இடத்தில் அவன் உதவியாளரின் இருக்கை.
இதற்கு முன்னால் அவனுக்கு உதவியாளராக இருந்தவர்கள் ஆண்கள்தான். இப்போதுதான் முதல் முறையாக ஒரு பெண் வந்திருக்கிறாள்.
முதல் நாளே உணவு இடைவேளையின்போது அவன் அறைக்குள் உரிமையோடு வந்து, தான் கொண்டு வந்திருந்த தக்காளி சாதத்தை ராம்குமாரிடம் ரம்யா பகிர்ந்து கொண்டபோது, அவனால் மறுக்கவோ, 'அனுமதி பெறாமல் எப்படி உள்ளே வந்தாய்?' என்று அவளிடம் கோபித்துக் கொள்ளவோ முடியவில்லை.
"யார் செய்தது, உங்கள் அம்மாவா?" என்றான் ராம்குமார், ஒரு பேச்சுக்காக.
"அம்மாவா? நான்தான் சார் செய்தேன். அம்மா அவர்கள் வீட்டில் அல்லவா இருக்கிறார்கள்?"
"அப்படியானால் நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்?"
'இதென்ன கேள்வி?' என்பது போல் அவனை உற்றுப் பார்த்த ரம்யா, "என் கணவர் வீட்டில்தான்! வேறு எங்கே இருப்பேன்? எங்கள் இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லையே!" என்று சொல்லிச் சிரித்தாள்.
"ஐ ஆம் சாரி" என்று அசடு வழிந்த ராம்குமார், அவளைச் சரியாகப் பார்க்காமல் அவள் இளம் பெண் என்பதை வைத்து அவள் திருமணம் ஆகாதவள் என்று நினைத்து விட்ட தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான்.
"இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? எனக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே நீங்கள் என்னைச் சந்தித்திருக்க வேண்டும்!" என்றாள் ரம்யா.
ராம்குமார் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான். 'என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்? ஒரு மாதிரியானவளாக இருப்பாளோ? நான் சற்று விலகியே இருப்பது நல்லது' என்று நினைத்துக் கொண்டான்.
"ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் கல்யாணம் ஆனவள் என்று சொல்லி விடலாம். அவள் கழுத்தில்தான் விலங்கு இருக்குமே! ஆனால் ஒரு ஆணைப் பார்த்தால் அவர் கல்யாணம் ஆனவரா என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் கல்யாணம் ஆனவராகத்தான் இருக்க வேண்டும்!"
"எப்படிச் சொல்கிறீர்கள்?"
"சொல்ல மாட்டேன். இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு டெக்னிக். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்!"
அன்று மாலை வீட்டுக்கு வந்ததும், அவன் மனைவி கங்காவிடம் இது பற்றிக் கேட்டான் ராம்குமார்ர்.

"ஒரு ஆண் திருமணம் ஆனவனா என்பதைக் கண்டு பிடிக்கப் பெண்களிடம் ஏதோ டெக்னிக் இருக்கிறதாமே, உனக்குத் தெரியுமா?"
"யார் சொன்னார்கள்?"
"ரம்யா என்று எனக்கு உதவியாளராக ஒரு பெண் வந்திருக்கிறாள். அவள் சொன்னாள்."
"எனக்குத் தெரியாது. அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்" என்றாள் கங்கா.
"யார் சொன்னார்கள்?"
"ரம்யா என்று எனக்கு உதவியாளராக ஒரு பெண் வந்திருக்கிறாள். அவள் சொன்னாள்."
"எனக்குத் தெரியாது. அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்" என்றாள் கங்கா.
அவள் கோபமாகப் பேசுவது போல் தோன்றியது. 'ஒரு வேளை ரம்யாவுடன் எனக்கு ஏதாவது தொடர்பு ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறாளோ?'
நாளைக்கு ரம்யா "உங்கள் மனைவி என்ன சொன்னார்கள்?" என்று கேட்டால் என்ன சொல்வது என்று அவன் கவலைப்பட்டான். ஆனால் ரம்யா இதுபற்றி அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
ரம்யா அவனுக்கு உதவியாளராக வந்து சேர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. அவனிடம் இயல்பாகவும், சில சமயம் விளையாட்டாகவும் பேசினாலும், வேலையில் கருத்தாக இருந்தாள்.

அவன் முதலில் பயந்தது போல் அவள் ஆண்களுக்கு வலை வீசும் குணம் கொண்டவள் இல்லை என்று தெரிந்தது. சொல்லப் போனால், அவளிடம் ஒரு அலட்சியம் இருந்ததாகத் தோன்றியது.
'நீ என் மேலதிகாரி. அதனால் நீ சொன்னதை நான் செய்கிறேன். மற்றபடி நீ யாரோ, நான் யாரோ' என்பது போல்தான் நடந்து கொண்டாள் . இதை அலட்சிய மனப்பான்மை என்று சொல்வதை விட சுதந்திர மனப்பான்மை என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியது.
ஒருமுறை அலுவலகத்தில் ஒரு ஊழியர் அவளிடம் ஏதோ தவறாகப் பேசியபோது ரம்யா செருப்பைக் கழற்றியதாகவும், அந்த ஊழியர் பயந்து ஒடி விட்டதாகவும் ஒரு செய்தி அவனுக்கு வந்தது. ரம்யா இது பற்றி அவனிடம் எவும் சொல்லவில்லை. அவனும் அவளைக் கேட்கவில்லை. இந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அவள் மீது அவனுக்கு ஒரு மரியாதை வந்து விட்டதாகத் தோன்றியது.
அன்று மாலை வீட்டுக்குப் போனதும், மனைவியிடம், "கங்கா, உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். உனக்கு வேலைக்குப் போக விருப்பமா?" என்று ஆரம்பித்தான்.
அவள் முகத்தில் உடனடியாக ஒரு மகிழ்ச்சிக் களை வந்து உட்கார்ந்து கொண்டது.
"கல்யாணத்துக்கு முன்பு நான் வேலை பார்த்துக் கொண்டுதானே இருந்தேன்? நீங்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று சொன்னதால்தானே வேலையை விட்டேன்! படித்து விட்டு வீட்டில் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே என்று நான் வருந்தாத நாள் இல்லை. நீங்கள் சரி என்று சொன்னால் உடனே ஒரு வேலை தேடிக் கொள்வேன்."
"ஐ ஆம் சாரி கங்கா" என்றான் ராம்குமார். (ரம்யா வேலைக்குச் சேர்ந்த அன்று, அவளிடம் 'ஐ ஆம் சாரி' என்று அவன் சொன்னதற்கு ரம்யா குறும்புத்தனமாக பதில் சொன்னது இப்போது அவன் நினைவுக்கு வந்தது).
"வெளியே வேலைக்குப் போனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நினைத்துத்தான் அப்படிச் சொன்னேன். தங்களைப் பாதுகாத்துக் கொள்வது பெண்கள் கையில்தான் இருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. அதனால் நீ வேலைக்குப் போவதற்கு இனிமேல் நான் தடை சொல்ல மாட்டேன்."
"தாங்க்ஸ் எ லாட். ஆனால் நான் ரம்யாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவளைப் பார்த்துத்தான் நீங்கள் மனம் மாறி இருக்கிறீர்கள்!"
"அது எப்படி உனக்குத் தெரியும்?"
"ம்? இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த டெக்னிக். அது என்ன டெக்னிக் என்று நீங்கள் ரம்யாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!"
சிரித்துக் கொண்டே உள்ளே போனாள் கங்கா.
திருமணத்துக்குப் பிறகு அவள் இத்தனை உற்சாகமாகச் சிரித்ததை ராம்குமார் பார்த்ததில்லை!
குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பொருள்:
ஒரு பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைப்பதன் மூலம் அவளுடைய கற்பைக் காப்பாற்ற முடியாது. ஒரு பெண் தன் மனத்திண்மையின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான் சிறந்தது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
ஆயினும், அவளுடைய பகுதிக்கு மெய்யானந்தர் என்ற சாமியார் வந்தபோது அவரைச் சந்திக்க சுகுணா ஆர்வம் காட்டினாள்.
இதற்குக் காரணம் மெய்யானந்தர் யார் என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்பவர் என்று பெயர் பெற்றிருந்ததுதான்.
மெய்யானந்தரின் பேச்சு முடிந்ததும், கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார்.
மெய்யானந்தரின் பேச்சு முடிந்ததும், கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார்.
சுகுணாவின் முறை வந்தபோது, அவள் எழுந்து, "சுவாமி, ஆண்களுக்கு பிரம்மச்சரியம், இல்லறம், வனவாசம், துறவறம் என்று நான்கு நிலைகள் வகுக்கப்பட்டிருப்பது போல் பெண்களுக்கு ஏன் வகுக்கப்படவில்லை?" என்று கேட்டாள்.
"இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஆண், பெண் இருவருக்கும் இந்த நிலைகளை வகுத்தால், இருவரும் தனி தனிப் பாதையில் போக விரும்பலாம். கணவன் வனவாசம் போக விரும்பும்போது, மனைவி இல்லறத்தில் தொடர விரும்பலாம்.
"இரண்டாவது காரணம் ஆண்கள் இந்த நான்கு நிலைகளைப் பின்பற்றுவதை எப்போதோ விட்டு விட்டார்கள். பெண்களுக்கு இவை வகுக்கப்பட்டிருந்தால், அவர்கள் அவற்றை தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருப்பார்கள், விரதம் போன்ற விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பது போல். இதை நம் முன்னோர்கள் விரும்பவில்லையோ என்னவோ!
"மூன்றாவது காரணம் நம் சமுதாயம் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயம்! நான் சொன்ன மூன்று காரணங்களில் மூன்றாவது காரணம்தான் முக்கியமானது!"
சாமியாரின் சிரிப்பில் பக்தர்களும் பங்கு கொண்டனர்.
"அப்படியானால் என்போன்ற பெண்களுக்கு வீடுபேறு என்பதே கிடையாதா?" என்றாள் சுகுணா விடாமல்.
"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரிய பேறு இருக்கிறதே, அதை விடவா வீடுபேறு பெரியது?"
கூட்டம் மீண்டும் சிரித்தது.
"இதை நான் சிரிப்பதற்காகச் சொல்லவில்லை" என்றார் மெய்யானந்தர், புன்னகை மாறாமல். "உண்மையிலேயே பெண்களுக்கு மகப்பேற்றை விடப் பெரிய பேறு எதுவும் இல்லை."
சுகுணா சற்றே ஏமாற்றத்துடன் அமர்ந்தாள்.
"என்னம்மா, நான் சொன்ன பதில் உனக்கு ஏமாற்றம் அளிக்கிறதா?" என்றார் மெய்யானந்தர் அவளைப் பார்த்து.
"ஆமாம்" என்றாள் சுகுணா.
கூட்டம் அதிர்ச்சியான முகபாவத்துடன் அவளை நோக்கியது.
"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரும்பேறு இருக்கிறது என்பதற்காக வீடுபேறு அவர்களுக்கு மறுக்கப்படவில்லை. ஆண்களைப் போன்று ஆசிரம நியதிகள் எதுவும் பெண்களுக்கு வகுக்கப்படாததால் பெண்கள் வீடுபேறு அடைவதற்காக எதுவுமே செய்ய வேண்டியதில்லை"
"எதுவுமே செய்ய வேண்டாமா?" என்றாள் சுகுணா வியப்புடன்.
"வேண்டாம். கணவனையும் குடும்பத்தையும் அக்கறையோடு பார்த்துக் கொண்டால் போதும்! என்ன, இதுவே பெரும்பாடு ஆயிற்றே, இதை விடக் காட்டுக்குப் போய்த் தவம் செய்வதே சுலபமாக இருக்குமே என்று சொல்லப் போகிறாயா?"
இதற்குச் சிரிப்பதா வேண்டாமா என்று கூட்டம் யோசித்துக் கொண்டிருந்தபோது, சுகுணா மட்டும் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பில் சாமியாரும் சேர்ந்து கொண்டார்.
குறள் 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
பொருள்:
ஒரு பெண் தன் கணவனையும் குடும்பத்தையும் முறையாகப் பேணி வந்தால், அவள் தேவர்கள் வாழும் உலகை அடையும் பெரும் பேற்றைப் பெறுவாள்.

நகரத்தில் பிறந்து வளர்ந்து, பட்டப்படிப்பு படித்தவளான ருக்மணி ஒரு கிராமத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் தன்னை மணந்ததில் ஆரம்பத்தில் பாலகிருஷ்ணனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது.
ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே, தன் மனைவியின் நாட்டம் பணத்தில்தான் இருந்தது என்பதைப் புரிந்து கொண்டபோது அவனுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.
"டவுன்ல பொறந்து வளர்ந்து காலேஜில படிச்சுட்டு ஏன் இந்தப் பட்டிக்காட்டுல வந்து வாழ்க்கைப்பட்டேன் தெரியுமா?" என்று ஒரு நாள் ருக்மிணியே அவனிடம் கேட்டாள்.
"டவுன்ல பொறந்து வளர்ந்து காலேஜில படிச்சுட்டு ஏன் இந்தப் பட்டிக்காட்டுல வந்து வாழ்க்கைப்பட்டேன் தெரியுமா?" என்று ஒரு நாள் ருக்மிணியே அவனிடம் கேட்டாள்.
"என்னைப் புடிச்சதினாலதான்னு சொல்லிடாதே! சந்தோசம் தாங்காம என் இதயம் நின்னு போயிடப் போகுது!" என்றான் பாலகிருஷ்ணன் விளையாட்டாக. ஆயினும் மனதுக்குள் அவள் அப்படிச் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.
"நான் அப்படியெல்லாம் பொய் சொல்ற ஆளு இல்லே! இது ஒரு பட்டிக்காடா இருந்தாலும், நீங்க ஒரு முதலாளி. சொந்த நிலத்தில பயிர் செஞ்சுக்கிட்டு வாழ்க்கையை நடத்தறவரு. டவுன்ல யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, மத்தவங்ககிட்ட கை கட்டி வேலை பாக்கற ஒரு ஆளைத்தான் கட்டிக்கிட்டிருக்கணும். அவரு பியூனா இருந்தாலும் ஜெனரல் மானேஜரா இருந்தாலும் அடிமைத் தொழில் பாக்கிறவராத்தான் இருந்திருப்பாரு."
இந்த மட்டும் தன் தொழிலுக்கு ஒரு மரியாதை கொடுக்கிறாளே என்று நினைத்துக் கொண்டான் பாலகிருஷ்ணன்.
"ஆனா உங்க வருமானம் பத்தாது. விவசாயத் தொழில்ல வருமானம் அதிகரிக்கறத்துக்கும் வாய்ப்பு இல்லே! அதனால நான் ஏதாவது தொழில் செய்யலாம்னு இருக்கேன்."
"தொழிலா? இந்த ஊர்லயா? அதோட, தொழில்ல முதலீடு செய்யறதுக்கெல்லாம் என்கிட்டே பணம் இல்லையே!"
'ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க போதும். இன்னும் ஒரு வருஷத்தில வட்டியோட திருப்பித் தரேன். அப்படி உங்களால முடியாதுன்னா எங்க அப்பாகிட்டே வாங்கிக்கறேன். என்ன, வட்டி அவருக்குப் போகும்!"
"பத்தாயிரம் ரூபா என்னால கொடுக்க முடியும். நாளைக்கே தரேன். ஆனா என்ன தொழில், எப்படிப் பண்ணப் போறேன்னு ஒண்ணுமே புரியல்லியே!"
"உலகத்திலேயே லாபமான தொழில் வட்டிக்குக் கடன் கொடுக்கறதுதான். இந்த ஊர்ல வட்டிக்குக் கடன் கொடுக்கறவங்க யாரும் இல்லை. வட்டிக்குக் கடன் வாங்க இந்த ஊர் ஜனங்களெல்லாம் பஸ் புடிச்சு டவுனுக்குத்தான் போறாங்கன்னு விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். எங்கிட்ட கடன் வாங்கினா பஸ் கட்டணம் மிச்சம் ஆகும், நேரம் அலைச்சல் எல்லாம் கூட மிச்சம் ஆகும்."
"வட்டித் தொழில் மட்டும் வேண்டாம் ருக்மணி!"
"ஏன்?"
"எங்க பரம்பரையே கொடுத்துப் பழக்கப்பட்ட பரம்பரை. எங்கப்பா, தாத்தா எல்லாரும் மத்தவங்களுக்கு தாரளமா உதவி செஞ்சிருக்காங்க. உதவின்னு கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டதில்லை. அப்படி இருக்கச்சே நீ வட்டிக்குக் கடன் குடுத்தா நம்ப குடும்பப் பெயரே அழிஞ்சுடும்."
"அதானே பார்த்தேன் உங்க பரம்பரையில சொத்துக்கள் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வந்திருக்கேன்னு! கொடுத்துக் கொடுத்தே அழிச்சிருக்காங்க உங்க அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும். அதான் நீங்க ஓட்டாண்டியா நிக்கறீங்க!"
"வாய்க்கு வந்தபடி பேசாதே ருக்மணி. நாம வசதியா வாழற அளவுக்கு நமக்கு சொத்து இருக்கு. அதுக்கும் மேல, இந்த ஊர்ல நம்ப குடும்பத்தும் பேர்ல ஒரு மரியாதை இருக்கு. இப்ப உன்னை யாராவது வழியில பாத்தாக் கூட 'மகராசி'ன்னு வாழ்த்துவாங்க."
"மகராசின்னு வாயால வாழ்த்தினா போதுமா? மகாராணியா வாழணும். அதுக்கு நிறையப் பணம் வேணும். உங்க வருமானம் எல்லாம் ரெண்டு வேளை சாப்பிடறதுக்குத்தான் பத்தும். நமக்குப் பொறக்கப் போற குழந்தைகளை நல்லாப் படிக்க வைக்கணும். அவங்களுக்கு நிறைய சொத்து சேர்த்து வைக்கணும். இதுக்கெல்லாம் ஏத்த வருமானம் வட்டித் தொழிலில்தான் கிடைக்கும்."
"வேண்டாம் ருக்மணி. இந்தத் தொழிலை நான் அனுமதிக்க மாட்டேன்."
"நீங்க அனுமதிக்கலேன்னா எங்க அப்பாகிட்ட பணம் வாங்கி, இந்த ஊர்லேயே எங்கேயாவது ஒரு குடிசையைப் போட்டுக்கிட்டு இந்தத் தொழிலை நடத்தத்தான்போறேன்!"
அதற்கு மேல் பாலகிருஷ்ணனால் எதுவும் பேச முடியவில்லை.
ருக்மிணி தன் அப்பாவிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டபோது, அவர் இது போதாது என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க, ருக்மணியின் வட்டித் தொழில் விரைவிலேயே ஜாம் ஜாமென்று துவங்கியது.
ருக்மிணி எதிர்பார்த்தது போல், டவுனுக்குப் போய் கடன் வாங்கிய பலர் அவளிடம் கடன் வாங்கினார்கள். 1000, 2000 என்று சிறிய தொகையை மட்டும் கடனாகக் கொடுத்து, வட்டியும் அசலும் திரும்ப வர வர, அவள் முதலீடு சில மாதங்களிலேயே குட்டி போடத் தொடங்கியது.
வட்டியை ஒழுங்காகக் கொடுக்காதவர்கள், அசலைக் கொடுக்காதவர்கள் எல்லோரையும் ருக்மிணி அவர்கள் வீடு தேடிச் சென்று அவர்கள் மானம் போகும்படி உரத்த குரலில் கடுமையாகப் பேசினாள். அவளுடைய ஏச்சு அருவருக்கும் அளவுக்கு இருந்ததால், அதற்கு பயந்தே கடனாளிகள் பணத்தைக் காலத்தில் செலுத்தத் துவங்கினர்.
பாலகிருஷ்ணன் இதில் பட்டுக் கொள்ளாமல் இருந்தாலும், சிலர் அவனிடம் ருக்மிணி பற்றி அங்கலாய்த்தார்கள். பாலகிருஷ்ணன் பெரும்பாலும் பதிலே சொல்லவில்லை. சில சமயம், "இந்த வியாபாரம் என் பெண்டாட்டி செய்யறது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.
ஒருநாள் அவன் நண்பன் காளிமுத்து அவனைத் தேடி வந்தான். "நடவுக்கு உங்கிட்ட வாங்கின ஐயாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்தேன்" என்றான்.
"அதுக்கென்ன அவசரம்? இன்னும் அறுவடை ஆகலியே! இப்ப ஏது உன்கிட்ட பணம்?" என்றான் பாலகிருஷ்ணன்.
"என்கிட்ட பணம் இல்லைதான். என் மச்சான்கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்."
"எதுக்கு? நான் உன்னைப் பணம் கேட்டேனா?" என்றான் பாலகிருஷ்ணன்.
"நீ கேக்கல்ல. கேக்கவும் மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஆனா உன் சம்சாரம் வட்டிக்குப் பணம் குடுத்துக்கிட்டு இருக்கறச்சே, நான் வட்டி இல்லாத இந்தக் கடனை ரொம்ப நாள் வச்சுக்கறது நல்லாவா இருக்கும்? உன் சம்சாரத்துக்கு இந்தக் கடன் விஷயம் தெரிஞ்சு ஏதாவது சொல்லிட்டாங்கன்னா என்னால அதைப் பொறுத்துக்க முடியாது" என்றான் காளிமுத்து.
பாலகிருஷ்ணன் தன் இயலாமையை நினைத்து மனம் நொந்தான்.
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
பொருள்:
குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை உள்ள மனைவி அமையாதவனால் தன்னை இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் முன் கம்பீரமாக நடக்க முடியாது.
"டேய் ரகு எப்படிடா இருக்கே? உன் கல்யாணத்துக்கு அப்புறம் இப்போதான் பாக்கறேன்! நீதான் என் கல்யாணத்துக்கு வரவே இல்லை!" என்றான் ராஜேஷ்.
"காரணம் உனக்குத் தெரியுமே! வேலை விஷயமா டில்லிக்குப் போயிருந்தேன்னு! உன் மனைவி வந்திருக்காங்களா?"
"அதோ உன் மனைவியோட பேசிக்கிட்டிருக்கா பாரு! அவங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவங்களாம்!"
"அப்ப, நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியதுதான்! அவங்க நம்மளைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். நாமளும் அவங்களைப் பத்திக் கொஞ்சம் பேசலாம். உன் மனைவி எப்படி?"
"எப்படின்னா? தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பா. கொஞ்சம் நகைப் பைத்தியம். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ள ரெண்டு தடவை என்னை நகை வாங்க வச்சுட்டா!"
"உன்கிட்ட நிறையப் பணம் இருக்கும் போலிருக்கு!"
"நீ வேற! கடன் வாங்கித்தான் நகை வாங்கிக் கொடுத்தேன். என்ன வயத்தெரிச்சல்னா தங்கத்தோட விலை இப்பக் குறைஞ்சுடுச்சு. ஆனா நான் வாங்கின கடன் வட்டியோட சேர்த்து அதிகமாயிடுச்சு!"
"நீ கடன் வாங்கித்தான் நகை வாங்கினேங்கறது உன் மனைவிக்குத் தெரியுமா?"
"கடன் வாங்கியாவது நகை வாங்கணும்னு பிடிவாதம் பிடிச்சது அவதான்! அது சரி, உன் மனைவி எப்படி?"
"இந்த விஷயத்தில உன் மனைவிக்கு நேர்மாறுன்னுதான் சொல்லணும்! நான் பிசினஸுக்காகக் கொஞ்சம் கடன் வாங்கி அதுக்கு வட்டி கட்டிக்கிட்டிருந்தேன். என் மனைவிக்கு இது தெரிஞ்சதுமே தன்னோட நகை எல்லாத்தையும் கழட்டிக் குடுத்துட்டா. மொதல்ல கடனை அடையுங்க, நகைக்கு என்ன, நம்பகிட்ட பணம் சேர்ந்தப்பறம் வாங்கிக்கலாம்னு சொன்னா. நான் அசந்து போயிட்டேன். இப்ப கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருக்கேன். வட்டிச் சுமை குறைஞ்சதே பெரிய லாபமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து அவளுக்கு ஒரு நகையாவது வாங்கிக் கொடுக்கணும்."
"ரொம்பப் பெரிய விஷயம்டா இது. இப்படிப்பட்ட மனைவி கிடைச்சது உன்னோட அதிர்ஷ்டம்தான். ம்... என் மனைவியும் மனசு மாறினா நல்லா இருக்கும். அது இருக்கட்டும். கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சே, அப்பாவாகிற முயற்சி எல்லாம் எந்த அளவுக்கு இருக்கு?"
"இன்னும் ஆறு மாசத்தில அப்பா ஆகி விடுவேன். உன் கதை எப்படி?"
"வாழ்த்துக்கள். நான் அப்பா ஆறதுக்கு இன்னும் வேளை வரலை."
"ஓ! கவலைப்படாதே! சீக்கிரமே உனக்கும் நல்லது நடக்கும்!"
"எங்கே? என் மனைவிதான் குழந்தைக்கு இப்ப என்ன அவசரம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காளே!"
"ஏண்டி அதுக்குள்ளே என்னடி குழந்தைக்கு அவசரம்?" என்றாள் ரஞ்சனி ராஜேஷ்.
"ஏண்டி, கல்யாணம் ஆகி ஏழெட்டு மாசம் கழிச்சுத்தான் நான் கர்ப்பமானேன். இது உனக்கு அவசரமாப் படுதா?" என்றாள் அஞ்சலி ரகு.
"என்னைப் பாரு. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் குழந்தை வேணாம்னு என் கணவர்கிட்ட சொல்லிட்டேன். வாழ்க்கையைக் கொஞ்ச நாள் அனுபவிக்கணும்டி. அது இருக்கட்டும். என்ன கண்ணாடி வளையலையும் தாலிக்கொடியையும் தவிர வேற நகையையே காணும்?"
"எனக்கு நகை போட்டுக்கறதுல அதிகமா ஈடுபாடு கிடையாது" என்றாள் அஞ்சலி.
"கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாதுன்னு சொல்லு!" என்றாள் ரஞ்சனி.
அதன் பிறகு அவர்கள் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள்.
இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு ஜோடிகளும் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொண்டபோது, ரஞ்சனியின் உடலில் இன்னும் சில நகைகள் ஏறியிருந்தன, ராஜேஷின் கடன் சுமை ஏறி இருந்ததைப் போல்!
அஞ்சலியின் உடலில் நகைகள் எதுவும் இல்லை. அவள் இடுப்பில் ஒன்றரை வயதுக் குழந்தை இருந்தது. ரஞ்சனியின் நகைகளை விட அஞ்சலியின் குழந்தை அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது.
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
பொருள்:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கையின் சிறப்பு. நல்ல குழந்தைகளைப் பெறுவது அத்தகைய வாழ்க்கைக்கு நல்ல அணிகலன் ஆகும்.

ஐயா, நான் இங்கு அமெரிக்காவில் தமிழ் தெரியாத குழந்தைகளுக்கு இலவசமாக திருக்குறள் கற்றுக் கொடுக்கிறேன்.உங்களுடைய
ReplyDeleteகதைகள், தொடர்பான சம்பவங்கள், மிக மிக அருமை! உங்களது ஆழ்ந்த புலமையயும், அனுபவங்களையும் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டேன்! நீங்கள் ஒரே ஒருவர்தான் எல்லாத்திருக் குறள்களுக்கும் மிகப் பொருத்தமான கதைகள் எழுதி இருக்கிறீர்கள் என்பது ஒரு பெரிய தமிழ்த் தொண்டு!எனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.என்னைப் போல சாதாரண மனிதர்களுக்கு மிகவும் உபயோகமாக , வழிகாட்டியாக தங்கள் கதைகள் அமைந்துள்ளன! நன்றியுடன் வணக்கம்!
மிக தாமதமான என் பதிலுக்கு மன்னிக்கவும். தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. தங்களைப் போன்றவர்கள் அளித்த ஊக்கத்தாலும், இறைவனின் அருளாலும் 1330 குறள்களுக்கும் கதைகள் எழுதி முடித்து விட்டேன்.
Delete