"டேய் மச்சி, கொஸ்ச்சின் பேப்பர் லீக் ஆயிடுச்சுடுடா!" என்று குதித்துக் கொண்டே வந்தான் சதீஷ்.
"என்னடா சொல்றே?" என்றான் அரவிந்த்.
"ஆமாண்டா. ரொம்ப சீக்ரட். அம்பது பேருக்குத்தான் லீக் ஆன பேப்பர் கெடச்சுருக்கு - இன்க்ளூடிங் மீ!".
"எப்படிடா? கவர்ன்மென்ட் சும்மா இருக்காதே!"
"நாளைக்குப் பரீட்சை. அவங்களுக்கு இன்னும் விஷயமே தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சாலும் ஒண்ணும் பண்ண முடியாது. திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆயிரம் ரூபா கொடுத்து வாங்கி இருக்கேன். நீ ஐநூறு ரூபா கொடுத்துடு."
"டேய் இதெல்லாம் வேண்டாண்டா! நாமதான் நல்லாப் படிச்சுக்கிட்டிருக்கோமே! இந்தக் குறுக்கு வழி எல்லாம் எதுக்கு?"
"உனக்குப் பணம் கொடுக்க இஷ்டம் இல்லேன்னா விட்டுடு. பேப்பரை உனக்கும் காட்டறேன். ஜிராக்ஸ் எடுக்க வேண்டாம். ரிஸ்க்."
"டேய்! நான் பணத்துக்காகச் சொல்லல்லே! இது மாதிரி குறுக்கு வழி எல்லாம் வேண்டாம்னு உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். ஒரு வேளை இந்த லீக் ஆன பேப்பரே போலியா இருந்தா? அல்லது பரீட்சையில் வேறே பேப்பர் வந்தா?"
"அதெல்லாம் வராது. இதுதான் வரப் போவுது. இதுக்கு மட்டும் ப்ரிபேர் பண்ணினா போதும்!"
"எனக்கு வேண்டாம். உனக்கும்தான் சொல்றேன். நாம ஏற்கனேவே படிச்சதை ரிவைஸ் பண்ணினாலே போதும். இதை நம்பி நீ ஏற்கனவே படிச்சதை ரிவைஸ் பண்ணாம கோட்டை விட்டுடாதே!"
சதீஷ் அவன் பேச்சைக் கேட்பதாக இல்லை.
"இது எப்படி ஐயா நடந்தது?" என்றார் டைரக்டர் கோபமாக.
"அது இன்வெஸ்டிகேட் பண்ணினாதான் சார் தெரியும். நாளைக்கு எக்ஸாம். இப்ப நம்மால ஒண்ணும் பண்ண முடியாது."
"ஏன் பண்ண முடியாது? புதுசா வேற கொஸ்ச்சின் பேப்பர் ரெடி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?"
"கொஸ்ச்சின் பேப்பர் ஒரு மணி நேரத்தில ரெடி பண்ணிடலாம். ஆனா பிரின்ட் பண்ணி எல்லா சென்ட்டருக்கும் அனுப்ப வேண்டாமா?"
"மொத்தம் எத்தனை சென்ட்டர் இருக்கு?"
"737 சென்ட்டர்."
"எல்லா சென்ட்டரிலும் இன்டர்நெட் கனெக்ஷனும் பிரின்ட்டரும் இருக்கு இல்ல?"
"இருக்கு... ஆனா..."
"சீஃப் எக்ஸாமினர்கிட்ட சொல்லி ஒரு மணி நேரத்துல புது பேப்பர் ரெடி பண்ணச் சொல்லுங்க. அத்தனை சென்ட்டரிலும் இருக்கிற எக்ஸாமினர்களுக்கும் பேப்பரை ஈமெயிலில் அனுப்பி அவங்களுக்கு விவரமா இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துடுங்க. அவங்களுக்கு எத்தனை காப்பி தேவையோ அத்தனை காப்பி சென்ட்டரில் இருக்கற பிரின்ட்டர்ல பிரின்ட் எடுக்கச் சொல்லுங்க. பிரின்ட்டர் ஒர்க் பண்ணல, பேப்பர் இல்லை இது மாதிரி பிரச்னை இருந்தா அவங்க சொந்தப் பொறுப்பில வெளிய போய் பிரின்ட் எடுக்கலாம். ஆனா, அது நாளைப் பரீட்சைக்கான பேப்பர்னு யாருக்கும் தெரியக் கூடாது.
"ரெண்டு மூணு இடங்களைத் தவிர, சென்ட்டர்லேயே வேலை முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். பிரின்ட் எடுக்க யாராவது உதவியாளரைப் பயன்படுத்தினா அது வேறே ஏதோ பரிட்சைக்கான பேப்பர் என்கிற மாதிரி எண்ணத்தை உருவாக்கணும். இன்னி ராத்திரிக்குள்ளே எல்லா பேப்பரையும் ரெடி பண்ணி கவர்ல போட்டு சீல் பண்ணி அவங்க பொறுப்புல வச்சுக்கணும். செலவு முன்னே பின்னே ஆனால் பரவாயில்லை. பில்லை நமக்கு அனுப்பினா, நான் பாஸ் பண்ணி விடுவேன்னு சொல்லுங்க. இந்தப் பேப்பர் எங்கேயாவது லீக் ஆனா எக்ஸாமினர்தான் பொறுப்பு என்று கடுமையாச் சொல்லிடுங்க. ஏன் இப்படிச் செய்யறோம்னு காரணம் சொல்ல வேண்டாம். கேட்டா, புதுசா ஒரு ப்ரோஸீஜரை டெஸ்ட் பண்ணிப் பாக்கறோம்னு சொல்லுங்க. யாருக்காவது ஏதாவது சந்தேகமோ பிரச்னையோ இருந்தா, ராத்திரி எத்தனை மணியானாலும் எனக்கு நேரடியா ஃபோன் பண்ணலாம்னு சொல்லுங்க."
"சார், இது நடக்குமா?"
"நடந்தாகணும். பேப்பர் லீக் ஆகிச் சில பேர் அதனால பயன் பெறுவதை என்னால அனுமதிக்க முடியாது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். ஈமெயிலைப் படிச்ச உடனே பதில் அனுப்பணும்னு எழுதுங்க. எல்லா எக்ஸாமினர்களுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பும் வசதி சீஃப் எக்ஸாமினர் கிட்ட இருக்கும். அதன் மூலமா ஈமெயில் பார்க்கச் சொல்லித் தகவல் அனுப்புங்க. ஒரு மணி நேரத்துக்குள் பதில் அனுப்பாதவங்களுக்கு ஃபோன் பண்ணி உடனே மெயிலைப் பாக்கச் சொல்லுங்க. நாளைக்கு மெயிலைப் பாக்கலேன்னு யாரும் சொல்லக் கூடாது."
"சரி சார். "
மறுநாள் மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பரீட்சை எழுத உட்கார்ந்த சதீஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நண்பன் சொன்னது போல் படித்தவற்றை ரிவைஸ் பண்ணாமல் பேப்பர் கிடைத்து விட்ட மிதப்புடன் இருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று நொந்து கொண்டான்.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 32அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
பொருள்:
அறவழியில் நடப்பதால் அதை விட நன்மை பயப்பது எதுவும் இல்லை. அறவழியிலிருந்து மாறுபட்டு நடந்தால் அதைப் போல் கேடு விளைப்பது வேறு எதுவும் இல்லை.
இந்தக் கதையின் காணொளி வடிவத்தை இங்கே காணலாம்.
No comments:
Post a Comment