"கடைக்குப் போய்ப் புதுசா ஒரு டைனிங் டேபிள் வாங்கிட்டு வரலாம் வா" என்று அழைத்தான் முத்து.
"எதுக்குப் புதுசா வாங்கணும்? நம்ப டைனிங் டேபிள் நல்லாத்தானே இருக்கு?" என்றாள் அவன் மனைவி லட்சுமி.
"அதை வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சு இல்ல? அதைக் கொடுத்துட்டுப் புதுசா வாங்கிக்கலாம். எதுக்குப் பழசை வச்சுக்கிட்டு? நமக்கென்ன வசதியா இல்ல?"
இருவரும் நகரிலேயே மிகப் பெரிய ஃபர்னிச்சர் கடைக்குச் சென்றனர்.
கடையில் பல மாடல்களை பார்த்துப் பெரிய டைனிங் டேபிள் ஒன்றைத் தேர்வு செய்தான் முத்து. "இது நல்லா இருக்கு இல்ல?" என்றான்.
"நல்லாத்தான் இருக்கு."
"அப்ப இதையே வாங்கிடலாமா?"
"இருங்க. நான் ஒண்ணு காட்டறேன், அதையும் பாருங்க."
"இதை விட நல்லதாவா காட்டிடப் போறே? இந்தக் கடையிலேயே இதுதான் விலை அதிகம். வேற கடைக்குப் போனாலும் இதை விட நல்லதாக் கிடைக்காது."
"நான் காட்டறதையும் பாருங்களேன்!"
லட்சுமி காட்டிய டைனிங் டேபிளைப் பார்த்த முத்து, "இதையா வாங்கணுங்கற? இது ரொம்பச் சின்னதா இருக்கே? வசதி இல்லாதவங்க எது விலை குறைவுன்னு பாத்து வாங்குவாங்களே. அது மாதிரி இருக்கு இது!" என்றான்.
"நமக்கு இது போதுமே!"
"ஏன் இப்படிச் சொல்ற?"
"நம்ப வீட்டில நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நாம ரெண்டு பேருதான் உக்காந்து சாப்பிடப் போறோம். உங்க சொந்தக்காரங்களோ, என்னோட சொந்தக்காரங்களோ, உங்க நண்பர்களோ யாரும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வேளை கூடச் சாப்பிடப் போறதில்ல. யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் சோஃபாவில உக்காந்துட்டுப் போயிடப் போறாங்க! நமக்கு எதுக்கு பெரிய டைனிங் டேபிள்?"
மனைவி சொன்னதன் உட்பொருளை உணர்ந்தவனாக முத்து மௌனமாக இருந்தான்.
மடமை மடவார்கண் உண்டு.
பொருள்:

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 9
விருந்தோம்பல்
குறள் 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.
பொருள்:
விருந்தோம்பலில் ஈடுபடாமால் இருப்பது செல்வங்கள் இருந்தும் வறுமை என்ற நிலை. இந்த நிலை அறிவிலிகளுக்கு ஏற்படும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment