"நம்ம நிறுவனத்தோட ஜெனரல் மேனேஜர் பதவிக்கு மூணு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்கேன். இந்த மூணு பேர்ல யாரை நியமிக்கறதுன்னு நீங்கதான் சார் முடிவு பண்ணணும்!" என்றான் முகுந்தன்.
"வெளியிலே இருந்து யாரையாவது எடுக்கறதுன்னா, நான் அவங்க பின்னணியைப் பார்க்க வேண்டியதுதான். இவங்கள்ளாம் நம்ப நிறுவனத்தோட மூத்த நிர்வாகிகள்தானே? சி ஈ ஓ என்கிற முறையில உங்களுக்குத்தான் அவங்களைப் பத்தி நல்லாத் தெரியுமே! நீங்களே ஒத்தரை நியமிக்கலாமே! இதை ஏன் என்கிட்ட கொண்டு வரீங்க?" என்றார் நிறுவனத்தின் தலைவர் சங்கரராமன்.
"எனக்கு அடுத்த நிலையில இருக்கப் போறவரை நான் தேர்ந்தெடுக்கறதை விட, நீங்க தேர்ந்தெடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்."
"ஐ அப்ரிஷியேட் யுவர் எதிக்ஸ். மூணு பேரோட ப்ரொஃபைலையும் காட்டுங்க. முதல்ல இருக்கற பேருதான் உங்களோட முதல் தேர்வுன்னு வச்சுக்கலாமா?"
"அப்படி இல்ல. மூணு பேருமே இந்தப் பதவிக்கு ரொம்பவும் பொருத்தமானவங்கதான்."
"சரி. முதல் பேரில இருந்து ஆரம்பிக்கலாம். கிரிதரன்..."
ஒரு நிமிடம் அவரது விவரங்களைப் படித்து விட்டு, "இவரோட பின்னணி நல்லாத்தான் இருக்கு. இது என்ன நிறைய பேப்பர்ஸ் அட்டாச் பண்ணியிருக்கீங்க?" என்றார் சங்கரராமன்.
"அதெல்லாம் ஹெச் ஆர்ல தயார் பண்ணிக் கொடுத்த அவரோட முழுமையான பின்னணி விவரங்கள். அவர் முன்னால வேலை செஞ்ச கம்பெனிகளோட விவரம் எல்லாத்தையும் தொகுத்துத்தான் சுருக்கமா ஒரு ப்ரொஃபைல் ஷீட் தயார் பண்ணியிருக்கோம். அதைத்தான் நீங்க பாத்தீங்க. உங்ககிட்ட கொடுக்கும்போது இந்த அட்டாச்மெண்ட்டையெல்லாம் நான் ரிமூவ் பண்ணியிருக்கணும். ஐ ஆம் சாரி" என்றான் முகுந்தன்.
"அதனால் என்ன?" என்று சொல்லிக் கொண்டே தாள்களை வேகமாகப் புரட்டிய சங்கரராமன், "இதென்ன, ஏதோ எஃப் ஐ ஆர்னு போட்டிருக்கு?" என்றார்.
"சார்! அது ஒண்ணுமில்ல. அது அவர் முன்னால வேலை செஞ்ச கம்பெனி சம்பந்தப்பட்டது."
"என்ன அது? விவரமா சொல்லுங்க."
"சார்! அவருக்கும் ஒரு லேடி ஸ்டாஃபுக்கும் ஏதோ அ ஃபேர் இருந்திருக்கு. அந்தப் பொண்ணோட சம்மதத்தோடதான் அது நடந்திருக்கு."
"கன்சென்ஸுவல் ரேப்னு சொல்லுவாங்களே, அது மாதிரியா?" என்றார் சங்கரராமன் சிரித்தபடி.
"சார்! இது ரேப் இல்லை. அந்தப் பொண்ணுக்கும் இவருக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருந்திருக்கு. அது அந்த நிறுவனத்தில எல்லாருக்கும் தெரியுமாம். ஆனா அந்தப் பொண்ணு அவர் தன்னை பாலியல் வன்முறை செஞ்சதா திடீர்னு போலீஸ்ல புகார் கொடுத்திருக்கா!"
"இன்ட்ரஸ்டிங். அப்புறம்?"
"அவரை மிரட்டிப் பணம் கறக்கறதுக்காக அந்தப் பொண்ணோட புருஷன்தான் அவளை அப்படிப் புகார் கொடுக்க வச்சிருக்கான்!"
"அப்படின்னா அவ புருஷனுக்குத் தெரிஞ்சுதான் இந்த அஃபேர் நடந்திருக்குன்னு சொல்லுங்க. திஸ் இஸ் ரியல் கன்சென்சஸ்!"
"புகார் கொடுத்தா அவரு பயந்துடுவாரு, அவரை மிரட்டிப் பணம் வாங்கலாம்னு அவன் பிளான் பண்ணி இருக்கான். ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல உடனே எஃப் ஐ ஆர் போட்டுட்டாங்க. அப்புறம் ஏதோ ஒரு மாதிரி காம்ப்ரமைஸ் ஆயிடுச்சு. ஆனா, கிரிதரன் பேர்ல எஃப் ஐ ஆர் இருந்ததால, அவங்க கம்பெனியில அதை அவரோட பர்சனல் ஃபைல்ல ரிக்கார்ட் பண்ணிட்டாங்க."
"ஆமாம், இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அவர் நம்ம கம்பெனியில சேர அப்ளிகேஷன் போட்டபோது, அவரோட பழைய கம்பெனியிலிருந்து வந்த கான்ஃபிடென்ஷியல் ரிப்போர்ட்டில் இந்த எஃப் ஐ ஆர் பத்தி இருந்ததைப் பாத்துட்டு, அந்த கம்பெனி ஹெச் ஆர் மேனேஜருக்கு ஃபோன் பண்ணி விவரம் கேட்டேன். அவர்தான் இந்த விவரம் எல்லாம் சொன்னார். மத்தபடி கிரிதரன் ஒரு திறமையான நிர்வாகின்னும் சொன்னார்."
"நீங்க ரொம்ப தரோவா இருந்திருக்கீங்க. ஆனா செலக்ஷன்ல கோட்டை விட்டுட்டீங்க!"
"என்ன சார் சொல்றீங்க?"
"அடுத்தவனோட மனைவியோட உறவு வச்சுக்கறவனுக்கு எதுக்குமே தகுதியில்லை. ஹி டிஸர்வ்ஸ் நத்திங். எனக்கு இது முன்னாலயே தெரிஞ்சிருந்தா, இந்த ஆளை வேலைக்கு எடுக்காதீங்கன்னு அப்பவே சொல்லியிருப்பேன். இப்ப அவரை டிஸ்மிஸ் பண்ண முடியாது. ஆனா அவர் ஜி. எம்மா வராம தடுக்கலாம்."
"சார்! அது எப்பவோ நடந்தது! நம்ம கம்பெனிக்கு வந்தப்பறம் அவர் மேல எந்தப் புகாரும் இல்ல. அவர் ரொம்பத் திறமையானவர். இந்த மூணு பேர்ல அவர்தான் பெஸ்ட்ங்கறதுன்னு என்னோட அபிப்பிராயம்."
"தென், லெட் அஸ் கோ ஃபார் தி செகண்ட் பெஸ்ட்! சாரி முகுந்தன்! நான் முதலிலேயே சொன்ன மாதிரி, அடுத்தவன் மனைவியோட உறவு வச்சுக்கறவன்லாம் மனுஷனே இல்ல. அவனுக்கு எதுக்கும் எந்த அருகதையும் கிடையாது. கிரிதரன் பேரை அடிச்சிடுங்க. மீதி ரெண்டு பேர்ல ஒத்தரை செலக்ட் பண்ணுவோம்" என்றார் சங்கரராமன், உறுதியாக.
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
பொருள்:
"

அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 15
பிறனில் விழையாமை
குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
பொருள்:
இன்னொருவனின் மனைவியின் தோள்களை அணைக்காதவர்தான் கடல் சூழ்ந்த இவ்வுலகில் எந்த ஒரு நன்மையையும் பெறத் தகுதி உடையவர்.
"
No comments:
Post a Comment