வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்காக, மூன்று நாட்கள் நேரம் ஒதுக்கப்பட்டது.
அலுவலகத்தின் மாநாட்டு அறையில், ஜெனரல் மானேஜர் தலைமையில், எல்லா மானேஜர்களும் கலந்து கொண்டனர்.
குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்காக, ஜெனரல் மானேஜர் பிரபாகரின் உதவியாளர் ஷாலினியம் அங்கே இருந்தாள். அவள் அந்த நிறுவனத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.
"இங்கே எல்லாரும் ஆண்களாக இருக்கோம். ஒரு பெண்ணும் இருக்கறது கொஞ்சம் பாலன்ஸ்டா இருக்கு" என்றார் ஒருவர். இதை சிலர் ரசித்துச் சிரித்தனர். ஷாலினி மௌனமாக இருந்தாள்.
அதற்குப் பிறகும், சிறிது நேரம், எல்லோரும் நாட்டில் நடக்கும் போராட்டங்கள், வரவிருக்கும் பொதுத் தேர்தல், கமலின் அரசியல் பிரவேசம், ரஜினியின் அடுத்த படம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
"ஜென்ட்டில்மென், நம்ம வேலையைப் பாக்கலாம்" என்று பிரபாகர் சொன்ன பிறகுதான், பட்ஜெட் பற்றி அலசத் தொடங்கினர்.
மூன்று நாள் பட்ஜெட் தயாரிப்பு முடிந்ததும், நான்காம் நாள் பட்ஜெட் விவாதங்கள் பற்றிய அறிக்கையை கம்ப்யூட்டரில் தயார் செய்து, பிரபாகருக்கு அனுப்பி வைத்தாள் ஷாலினி.
சற்று நேரம் கழித்து, பிரபாகர் ஷாலினியை அழைத்தான். அவள் தயாரித்திருந்த அறிக்கையில் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, "இந்த விஷயத்தில வேற மாதிரி முடிவெடுத்தோம் போலருக்கே" என்றான்.
"இல்ல சார். நான் எல்லா டிஸ்கஷனையும் விவரமா நோட் பண்ணியிருக்கேன்" என்றாள் ஷாலினி.
"நோட்ஸைக் காட்டு, பாக்கலாம்" என்றான் பிரபாகர்.
ஷாலினி தன் குறிப்புப் புத்தகத்தை எடுத்து வந்து, குறிப்பிட்ட விஷயம் பற்றிய விவாதங்களைக் காட்டினாள்.
அதைப் படித்து விட்டு, "ஓகே. நீட் ஜாப்" என்ற பிரபாகர், "ஒரு நிமிஷம். அந்த நோட்டைக் காட்டு... ஆமாம், இதில என்னவோ டைம் எல்லாம் குறிச்சு வச்சிருக்கியே, அது என்ன?" என்றான்.
"அது ஒண்ணும் இல்ல சார். என்னோட ரெஃபரன்சுக்கு" என்றாள் ஷாலினி.
"இல்லியே. உனக்கு எதுக்கு டைம் எல்லாம்? ஐ ஆம் க்யுரியஸ். என்னன்னு சொல்லு" என்றான்.
"இல்ல சார். தப்பா நினைக்காதீங்க. நான் ஈவினிங் காலேஜில் எம் பி ஏ படிக்கறேன். அதில டைம் அண்ட் மோஷன் ஸ்டடி பத்திப் படிச்சேன். அதான் இது மாதிரி மீட்டிங்கில் எல்லாம் நேரத்தை எப்படிப் பயன்படுத்தறாங்கன்னு பாக்கலாம்னு சும்மா..."
"இன்ட்ரஸ்டிங். ஆமாம். இதில நிறைய டைம் கேப் இருக்கே. உதாரணமா, 11.20க்கு ப்பறம் 11.55தான் இருக்கு. ஏன் 11.20க்கும் 11.55க்கும் நடுவில நடந்த டிஸ்கஷன் உன் நோட்ஸ்ல இல்ல."
"அப்ப டிஸ்கஷன் நடக்கவே இல்ல சார்!"
"ஏன், அப்ப பிரேக் எதுவும் இல்லியே? எதுக்காகாகவாவது எழுந்து வெளியில போயிட்டாங்களா?"
"இல்ல சார். ஐ மீன், எல்லாரும் உள்ளதான் இருந்தாங்க. சாரி சார்...அப்ப வேற எதையோ பத்திப் பேசிக்கிட்டிருந்தாங்க..."
"ஓ, ஐ கெட் இட். எப்பப்ப பட்ஜெட் பத்தி டிஸ்கஷன் நடந்ததோ, அந்த
டயத்தை நோட் பண்ணியிருக்க. பொதுவா டைம் ஸ்டடிங்கறது மானேஜர் பயன்படுத்தற டூல். நீ அதை மானேஜர்கள்கிட்டயே பயன்படுத்தி இருக்க!"
"சார்! தெரியாம...நான் எனக்காக சும்மா செஞ்சு பாத்தேன் சார்.. நீங்க நோட்புக் கேட்டதால, உங்ககிட்ட காட்டினேன். தப்பா எடுத்துக்காதீங்க சார்..."
"இல்ல ஷாலினி. ஐ அப்ரிஷியேட் இட். நீ எனக்கு ஒண்ணு பண்ணணும். மொத்தமா எவ்வளவு நேரம் டிஸ்கஷன் நடந்திருக்குன்னு டோடல் பண்ணி சொல்லு."
"ஏற்கெனவே பண்ணிட்டேன் சார். மொத்தம் அஞ்சு மணி 35 நிமிஷம் வருது."
"மை குட்னெஸ்! மூணு நாள்ள, மொத்தம் பதினெட்டு மணி நேரம் மீட்டிங் நடந்திருக்கு. அதுல, மூணுல ரெண்டு பங்கு வெட்டிப் பேச்சுப் பேசியே செலவழிச்சிருக்கோம். 12 மணி நேரம் வெட்டிப் பேச்சுப் பேசிப் பொழுது போக்கியிருக்கோம். இத்தனை மானேஜர்களோட எக்சிக்யூடிவ் டயத்தை கால்குலேட் பண்ணினா, கம்பெனிக்கு ஆயிரக் கணக்கில நஷ்டம். இதை எப்படி நான் ரியலைஸ் பண்ணாம போனேன்! ஸ்மால் டாக்னாலே கம்பெனிக்கு இவ்வளவு நஷ்டம்னா, இதுவும் ஒருவிதமான இர்ரெகுலாரிடிதான். கம்பெனிக்குப் பண்ற பெரிய அநீதி. திஸ் ஐஸ் ஆன் ஐ ஓபனர் டு மீ. இனிமே, மீட்டிங்குக்கெல்லாம் டயத்தைக் குறைச்சு, ரெகுலேட் பண்றேன். தாங்க் யூ ஷாலினி" என்றான் பிரபாகர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 20
பயனில சொல்லாமை
குறள் 200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
பொருள்:
பேசினால் பயனுள்ள சொற்களையே பேசவும். பயனற்ற சொற்களைப் பேச வேண்டாம்.
Your stories are really very nice and helps me to teach my son Thirukural in a very simple and at the same time in a easily understandable manner. Thank u
ReplyDeleteThank you for your interest and appreciation. Pl continue to give your feedback.
Delete