"ஏம்ப்பா, மத்தவங்களுக்கு நாம கெட்டது செஞ்சா, நமக்கு கெட்டது நடக்குமா?" என்றான் மகேஷ்.
"ஏன் கேக்கறே?" என்றான் பெரியசாமி.
"ஸ்கூல்ல பாடம் நடத்தச்சே, வாத்தியார் சொன்னாரு."
"இங்க பாரு. புத்தகத்தில் எழுதியிருக்கறதை வாத்தியார் சொல்வாரு. பரீட்சை எழுதறப்ப, புத்தகத்தில என்ன இருக்கோ, வாத்தியார் என்ன சொல்றாரோ, அதையே எழுது. அப்பத்தான் மார்க் போடுவாங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான் பள்ளிக்கூடமே போனதில்லை!" என்றான் பெரியசாமி, சிரித்தபடி.
மகேஷ் சற்றுக் குழப்பத்துடன் போனான்.
மகேஷ் போனதும், அருகிலிருந்த பாண்டியன், "என்னங்க, அருணாசலம் சொன்ன வேலையை எப்ப செய்யறது?" என்றான்.
"இன்னிக்குப் போய் அவன் வீட்டில குடியிருக்கறவங்களை மிரட்டிட்டு வா. ரெண்டு வாரம் டைம் கொடுப்போம். அதுக்குள்ளே காலி பண்ணலேன்னா, ஆளுங்களை அனுப்பி, ரெண்டு தட்டு தட்ட வேண்டியதுதான்" என்றான் பெரியசாமி.
சில நாட்கள் கழித்து, மகேஷ் சற்று வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தான்.
"என்னடா ஆச்சு?" என்றான் பெரியசாமி.
"அன்னிக்கு நான் உன்கிட்ட கேட்டேன் இல்ல?"
"என்ன கேட்ட?"
"மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணினா, நமக்குக் கெடுதல் வருமான்னு?"
"ஆமாம். அதுக்கு என்ன இப்ப?"
"என் வகுப்பில ரகுன்னு ஒரு பையன் இருக்கான். அவன் அப்பா யாரையோ கத்தியால குத்திட்டாராம். அவரை இப்ப போலீஸ்காரங்க கைது பண்ணி சிறையில வச்சுட்டாங்களாம். ரகு அழுதுக்கிட்டிருக்கான். இனிமே பள்ளிக்கூடத்துக்கே வர முடியாது போலருக்குன்னு எங்கிட்ட சொல்லி அழுதான்."
"அதுக்கு என்ன செய்யறது? கத்தியால குத்தினா, போலீஸ்ல கைது பண்ணத்தான் பண்ணுவாங்க."
"இதைத்தான் மத்தவங்களுக்கு கெட்டது பண்ணினா, நமக்கும் கெட்டது நடக்கும்னு சொல்றாங்களா?"
"அது எனக்குத் தெரியாது. எத்தனையோ பேரு தப்பு பண்ணிட்டு ஜாலியா சுத்திக்கிட்டிருக்கான். மாட்டறவன் மாட்டிக்கறான்."
"அது இல்லப்பா. நமக்குக் காயம் பட்டா வலிக்குது இல்ல?"
"ஆமாம்."
"நமக்கு வலிக்கக் கூடாதுன்னு நெனைக்கறோம் இல்ல? அது மாதிரிதானே மத்தவங்களுக்கும் வலிக்கும்? ரகுவோட அப்பாவுக்கு ஏன் இது தெரியல?"
"இப்ப என்ன சொல்ற?"
"இல்லப்பா. ரகு என் நண்பன். அவன் ரொம்ப நல்லவன். அவன் அப்பா இப்படி செஞ்சார்ங்கறதை என்னால நம்ப முடியல. இப்ப அவர் கஷ்டப்படறதோட, ரகு, அவன் அம்மா, தங்கச்சி எல்லாரும் இல்ல கஷ்டப்படறாங்க?"
"சரி போ. கொஞ்ச நாள்ள அவரை விட்டுடுவாங்க. எல்லாம் சரியாயிடும்" என்றான் பெரியசாமி.
அடுத்த நாள் பாண்டியன் வந்தபோது, "ஏண்டா, அருணாசலம் வீட்டில குடியிருந்தவங்க காலி பண்ணிட்டாங்களா?" என்றான் பெரியசாமி.
"இல்லண்ணே. ரெண்டு தட்டு தட்டினாத்தான் வழிக்கு வருவாங்க போலருக்கு. நாமதான் பாத்திருக்கமே, அடி உதவறது போல அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க!"
"சரி விடு. அவங்களை ஒண்ணும் செய்ய வேண்டாம். அவங்களா காலி பண்ணினா பண்ணட்டும்."
"என்னண்ணே இது? மயிலே மயிலேன்னா மயிலு இறகு போட்டுட்டா, நம்பளை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் என்ன வேலை?"
பெரியசாமி இதற்கு பதில் சொல்லவில்லை.
"சரி. அவங்க காலி பண்ணலேன்னா?"
"அருணாசலத்துக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடப் போறேன்."
"ஏங்க இப்படி?"
"தெரியல. ஏதோ குழப்பமா இருக்கு."
"ஏங்க, அடிதடியை எல்லாம் விட்டுடப் போறமா?"
"தெரியல. இந்தத் தடவை வேண்டாம். மறுபடி இந்த மாதிரி வேலையெல்லாம் எடுத்துக்கறதான்னு அப்புறம் சொல்றேன்" என்றான் பெரியசாமி.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
பொருள்:
துன்பம் விளைவிக்கும் தீவினைகள் தன்னை அணுகக் கூடாது என்று நினைப்பவன் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது.

அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 21
தீவினையச்சம்
குறள் 206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
பொருள்:
துன்பம் விளைவிக்கும் தீவினைகள் தன்னை அணுகக் கூடாது என்று நினைப்பவன் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment