"டேய் ரகு எப்படிடா இருக்கே? உன் கல்யாணத்துக்கு அப்புறம் இப்போதான் பாக்கறேன்! நீதான் என் கல்யாணத்துக்கு வரவே இல்லை!" என்றான் ராஜேஷ்.
"காரணம் உனக்குத் தெரியுமே! வேலை விஷயமா டில்லிக்குப் போயிருந்தேன்னு! உன் மனைவி வந்திருக்காங்களா?"
"அதோ உன் மனைவியோட பேசிக்கிட்டிருக்கா பாரு! அவங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவங்களாம்!"
"அப்ப, நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியதுதான்! அவங்க நம்மளைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். நாமளும் அவங்களைப் பத்திக் கொஞ்சம் பேசலாம். உன் மனைவி எப்படி?"
"எப்படின்னா? தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பா. கொஞ்சம் நகைப் பைத்தியம். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ள ரெண்டு தடவை என்னை நகை வாங்க வச்சுட்டா!"
"உன்கிட்நிறையப் பணம் இருக்கும் போலிருக்கு!"
"நீ வேற! கடன் வாங்கித்தான் நகை வாங்கிக் கொடுத்தேன். என்ன வயத்தெரிச்சல்னா தங்கத்தோட விலை இப்பக் குறைஞ்சுடுச்சு. ஆனா நான் வாங்கின கடன் வட்டியோட சேர்த்து அதிகமாயிடுச்சு!"
"நீ கடன் வாங்கித்தான் நகை வாங்கினேங்கறது உன் மனைவிக்குத் தெரியுமா?"
"கடன் வாங்கியாவது நகை வாங்கணும்னு பிடிவாதம் பிடிச்சது அவதான்! அது சரி, உன் மனைவி எப்படி?"
"இந்த விஷயத்தில உன் மனைவிக்கு நேர்மாறுன்னுதான் சொல்லணும்! நான் பிசினஸுக்காகக் கொஞ்சம் கடன் வாங்கி அதுக்கு வட்டி கட்டிக்கிட்டிருந்தேன். என் மனைவிக்கு இது தெரிஞ்சதுமே தன்னோட நகை எல்லாத்தையும் கழட்டிக் குடுத்துட்டா. மொதல்ல கடனை அடையுங்க, நகைக்கு என்ன, நம்பகிட்ட பணம் சேர்ந்தப்பறம் வாங்கிக்கலாம்னு சொன்னா. நான் அசந்து போயிட்டேன். இப்ப கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருக்கேன். வட்டிச் சுமை குறைஞ்சதே பெரிய லாபமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து அவளுக்கு ஒரு நகையாவது வாங்கிக் கொடுக்கணும்."
"ரொம்பப் பெரிய விஷயம்டா இது. இப்படிப்பட்ட மனைவி கிடைச்சது உன்னோட அதிர்ஷ்டம்தான். ம்... என் மனைவியும் மனசு மாறினா நல்லா இருக்கும். அது இருக்கட்டும். கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சே, அப்பாவாகிற முயற்சி எல்லாம் எந்த அளவுக்கு இருக்கு?"
"இன்னும் ஆறு மாசத்தில அப்பா ஆகி விடுவேன். உன் கதை எப்படி?"
"வாழ்த்துக்கள். நான் அப்பா ஆறதுக்கு இன்னும் வேளை வரலை."
"ஓ! கவலைப்படாதே! சீக்கிரமே உனக்கும் நல்லது நடக்கும்!"
"எங்கே? என் மனைவிதான் குழந்தைக்கு இப்ப என்ன அவசரம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காளே!"
"ஏண்டி அதுக்குள்ளே என்னடி குழந்தைக்கு அவசரம்?" என்றாள் ரஞ்சனி ராஜேஷ்.
"ஏண்டி, கல்யாணம் ஆகி ஏழெட்டு மாசம் கழிச்சுத்தான் நான் கர்ப்பமானேன். இது உனக்கு அவசரமாப் படுதா?" என்றாள் அஞ்சலி ரகு.
"என்னைப் பாரு. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் குழந்தை வேணாம்னு என் கணவர்கிட்ட சொல்லிட்டேன். வாழ்க்கையைக் கொஞ்ச நாள் அனுபவிக்கணும்டி. அது இருக்கட்டும். என்ன கண்ணாடி வளையலையும் தாலிக்கொடியையும் தவிர வேற நகையையே காணும்?"
"எனக்கு நகை போட்டுக்கறதுல அதிகமா ஈடுபாடு கிடையாது" என்றாள் அஞ்சலி.
"கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாதுன்னு சொல்லு!" என்றாள் ரஞ்சனி.
அதன் பிறகு அவர்கள் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள்.
இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு ஜோடிகளும் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொண்டபோது, ரஞ்சனியின் உடலில் இன்னும் சில நகைகள் ஏறியிருந்தன, ராஜேஷின் கடன் சுமை ஏறி இருந்ததைப் போல்!
அஞ்சலியின் உடலில் நகைகள் எதுவும் இல்லை. அவள் இடுப்பில் ஒன்றரை வயதுக் குழந்தை இருந்தது. ரஞ்சனியின் நகைகளை விட அஞ்சலியின் குழந்தை அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
பொருள்:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கையின் சிறப்பு. நல்ல குழந்தைகளைப் பெறுவது அத்தகைய வாழ்க்கைக்கு நல்ல அணிகலன் ஆகும்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 60மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
பொருள்:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கையின் சிறப்பு. நல்ல குழந்தைகளைப் பெறுவது அத்தகைய வாழ்க்கைக்கு நல்ல அணிகலன் ஆகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment